ஐசிசி தரவரிசை பட்டியல்…. நம்பர் ஒன் இடத்தை பிடித்த முகம்மது சிராஜ்…
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் முகமது சிராஜ் முன்னணி பந்துவீச்சாளர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். உலகின் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்ற பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் ஆகியோரை சிராஜ் பின்னுக்குத் தள்ளியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இவருக்கு கடந்த ஒரு வருடமாக ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தை வழங்கி கவுரவித்துள்ளது.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் சிராஜ் 729 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்து ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 2வது இடத்திலும், டிரென்ட் போல்ட் 708 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிராஜ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.