பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின்
பள்ளி வாகனத்தில் விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வாகன நிறுத்துமிடத்தில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முடிச்சூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேதுமாதவன் மகள் ஸ்ருதி, 2012ல் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 25ம் தேதி வழக்கம்போல் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது இருக்கைக்கு அடியில் இருந்த ஓட்டையில் விழுந்தார். . இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்