1லட்சம் கோடி மதிப்பில் 27 துறைமுகங்களை ரயில் பாதையுடன் இணைக்க திட்டம்..!

சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய ரயில்வே சுமார் 1 லட்சம் கோடி மதிப்பில் 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கு 27 துறைமுகங்களை இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 12 முக்கிய துறைமுகங்களை உள்ளடக்கிய 29 துறைமுகங்கள் ரயில் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தவும், செலவை மிச்சப்படுத்தவும் முடியும். தற்போது சென்னை, சிதம்பரம், கொச்சின், கொல்கத்தா, பாரதீப், விசாகப்பட்டினம், காமராஜர், நியூ மங்களுர், மோர்முகவ், மும்பை, ஜேஎன்பிடி மற்றும் தீன் தயாள் போர்ட் காண்ட்லா ஆகிய துறைமுகங்கள் ரயில் இணைப்புகளை கொண்டுள்ளன.

இந்தியாவில் தற்போது கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 226 துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 69 துறைமுகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த 69 துறைமுகங்களில் 29 பெரிய மற்றும் பிஸியான துறைமுகங்கள் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற துறைமுகங்கள் ரயில்வே நிலையங்களுக்கு அருகில் உள்ளன.

இந்திய இரயில்வே சுமார் 68,000 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே பாதையை கொண்டுள்ளது. கடற்கரை பாதைகளுடன் 7,500 கிமீ இரயில்வே பாதைகள் உள்ளன. மற்றவை ரயில்வே அருகாமையில் உள்ளன. புதிய ரயில் பாதைகள் மூலம் அவை இரயில்வே நெட்வொர்க் கீழ் கொண்டுவரப்படலாம்.

Also Read: இந்தியாவிடமிருந்து மேலும் 500,000 டன் கோதுமை இறக்குமதி செய்ய உள்ள எகிப்து..?

நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் இணைப்பை வழங்குவதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. கதி சக்தி திட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகம் மற்றும் கப்பல் மற்றும் துறைமுக அமைச்சம் இணைந்து நேரடி ரயில் இணைப்புகளை வழங்க பல துறைமுகங்களை அடையாளம் கண்டுள்ளன.

Also Read: இந்திய கோதுமையில் அதிக புரத சத்து உள்ளது.. எகிப்து அதிகாரிகள் தகவல்..

சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்களை மேம்படுத்த மற்றும் இரயில் பாதையுடன் இணைக்க ரயில்வே ஆணையம் 54 திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. அதில் 24 திட்டங்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும், 11 திட்டங்கள் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும், 13 திட்டங்கள் தென்மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும், 6 திட்டங்கள் மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

Also Read: நெருக்கடியை சமாளிக்க பணத்தை அச்சடிக்க உள்ளதாக இலங்கை பிரதமர் அறிவிப்பு..?

Leave a Reply

Your email address will not be published.