10 நாட்கள் சுற்றுப்பயணம்.. இந்தியா வருகிறார் மெக்சிகோ வெளியுறவு அமைச்சர்..

மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் 10 நாட்கள் பயணமாக மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்தியா வரும் எப்ரார்ட் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. மெக்சிகோவில் எரிசக்தி விலை உயர்வு, உணவு நெருக்கடியை தடுப்பதற்கான முயற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக மெக்கிகோ வெளியுறவு அமைச்சர் 10 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஓப்ராடோர் உள்நாட்டு நிகழ்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளதால், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவிற்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Also Read: சீனாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை..?

தனது நாட்டு வணிகர்கள் குழுவுடன் எப்ரார்ட் முதலாவதாக மார்ச் 23 முதல் 25 வரை சவுதி அரேபியாவின் ரியாத்தில் முதலீடு தொடர்பான சந்திப்புகளை நடத்த உள்ளார். பின்னர் மார்ச் 26 முதல் 27 வரை கத்தாரின் தோஹாவில் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மார்ச் 28 முதல் 29 வரை துபாய் எக்ஸ்போவில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முதலீட்டார்களை சந்திக்க உள்ளார். பின்னர் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.

Also Read: ரஷ்யா உக்ரைன் போர்: உலக கோதுமை சந்தையை பிடிக்க இந்தியா முயற்சி.. எகிப்துடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை..

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை எப்ரார்ட் சந்திக்கிறார். இந்தியாவின் மருந்து, தொழிற்நுட்பம் மற்றும் விண்வெளித்துறைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் எப்ரார்ட் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் பாதுகாப்பு, உக்ரைன் பிரச்சனை மற்றும் முதலீடு தொடரபாகவும் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.