JeM பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 10 ஸ்லீப்பர் செல்கள் கைது..? ஜம்மு காஷ்மீர் போலிசார் அதிரடி..

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 10 பேரை ஜம்மு காஷ்மீர் போலிசார் செவ்வாய் இரவு கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு ஸ்லீப்பர் செல்லாக வேலை பார்த்து வந்ததாக ஜம்மு காஷ்மீர் போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றங்களை விசாரிப்பதற்காக புதிதாக மாநில புலனாய்வு அமைப்பு (SIA) என்ற ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு செவ்வாய் இரவு அன்று தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே இரவில் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 10 ஸ்லீப்பர் செல்களை மாநில புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லை என்றும், இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதியிடம் இருந்து நேரடியாக அறிவுறுத்தல்களை பெற்றதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒருவரை கண்டறிந்தால் அவர்களது நெட்வொர்க்கை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்த குழுவில் உறுப்பினர்கள் துணை தொகுதிகளாகவும், செங்குத்து வடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொகுதியாக இருந்ததாகவும், கடினமான மற்றும் புத்திசாலித்தனமான கண்காணிப்பு மூலம் இவர்களை கண்டறிந்ததாக போலிசார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஸ்லீப்பர் செல்கள், பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வது, நிதி ஏற்பாடு செய்தல், தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு செல்வது மற்றும் மற்ற உதவிகளை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், வங்கி பயன்பாடு பதிவுகள் மற்றும் ஒரு போலியான துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலர் மாணவர்களாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவர்களை பயங்கரவாத அமைப்பிற்கு சேர்த்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் பதிவுகள் தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கையின் மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கை குறையும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.