இந்திய விமானப்படைக்கு மேலும் 114 மல்டி ரோல் போர் விமானங்கள்..? உள்நாட்டில் தயாரிக்க முடிவு..

இந்திய விமானப்படை புதிதாக 114 மல்டி-ரோல் போர் விமானத்தை (MRFA) வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த 114 போர் விமானங்களை பை குளோபல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டிற்குள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்நாட்டிலேயே இலகுரக போர் விமானம் தேஜஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிதாக வாங்கப்பட உள்ள 114 மல்டி ரோல் போர் விமானத்தையும் பை குளோபல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக வாங்கப்பட உள்ள விமான போட்டியில் அமெரிக்காவின் F-18, F-15 மற்றும் F-21, ரஷ்யாவின் MIG-35 மற்றும் Su-35, பிரான்சின் ரஃபேல், ஸ்வீடனின் சாப் கிரிபென் மற்றும் யூரோ ஃபைட்டர் டைபூன் ஆகியவை போட்டியில் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் பை குளோபல் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டரை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்..?

இந்த திட்டம் தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அடுத்த நடவடிக்கைக்கு அனுமதி பெற வேண்டியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்று மட்டும் இந்தியா வரவேண்டியுள்ளது.

இவை இரண்டு படைபிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய விமானப்படைக்கு தற்போது வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்கள் அவசர தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதாகவும் மேலும் விமானங்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது.

Also Read: ரஷ்யா உடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து..?உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு..

இந்திய விமானப்படையில் MIG-23 மற்றும் MIG-27 ஆகிய போர் விமானங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டன மற்றும் MIG-21 போர் விமானங்களும் படிப்படியாக நிறுத்தப்பட உள்ளதால் அவற்றுக்கு மாற்றாக தேஜஸ் மற்றும் மல்டி ரோல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.