விஸ்வ கல்யாண் மகாயக்யா மூலம் இந்து மதத்திற்கு திரும்பிய 1250 கிறிஸ்துவர்கள்..
சத்தீஸ்கர் மாநிலத்தின் மஹாசமுந்த் மாவட்டத்தில் உள்ள கடங்கபாலி கிராமத்தில் நடைபெற்ற விஸ்வ கல்யாண் மகாயக்யா நிகழ்ச்சியில் சுமார் 1250 பேர் தாய் மதத்திற்கு திரும்பியுள்ளனர்.
பாஜக மாநில செயலாளர் பிரபால் பிரதாப் சிங் ஜூதேவ், இந்து மதத்திற்கு திரும்பியவர்களின் கால்களை கங்கை நீரால் கழுவி மக்களை அவர்களின் தாய் மதத்திற்கு வரவேற்றார். சத்தீஸ்கரின் பதல்கானில் உள்ள குண்டபானியில் ஏற்கனவே 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1200 பேர் தாய் மதம் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் மார்ச் 22, 2022 அன்று மஹாசமுந்த மாவட்டத்தில் 1250 பேர் தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதாப் சிங், மதமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சனாதன தர்மத்திற்கு திரும்பும் வரை கர் வாப்சி பிரச்சாரம் காலவரையின்றி தொடரும் என கூறினார்.
மேலும் இந்துக்கள் மதமாற்றத்திற்கு மக்கள் தள்ளப்படுவதை எதிர்த்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்துத்துவாவை பாதுகாப்பதே தனது வாழ்வின் நோக்கம் என கூறிய பிரதாப், இந்து மதத்திற்கு மாறிய பெரும்பாலான குடும்பங்கள் பஸ்னா சாரிபாலியை சேர்ந்தவர்கள் என கூறினார்.
இந்து மதத்திற்கு மாறிய குடும்பங்கள் தங்கள் முன்னோர்கள் ஏறக்குறைய மூன்று தலைமுறைகளுக்கு முன்பு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கூறி உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் ஏழ்மையாக இருந்ததார் கிறிஸ்துவ மிஷினரிகள் மூலம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளனர்.
பிரதாப் கூறுகையில், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் 10,000 மேற்பட்ட மக்கள் மீண்டும் சனாதன தர்மத்திற்கு திரும்பியுள்ளனர். எனது தந்தை மரணத்திற்கு பிறகு நான் இந்த வேலையை முன்னெடுத்து வருகிறேன் என கூறியுள்ளார்.
Also Read: உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம்.. முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி..!
கொரோனா தொற்று காரணமாக எங்களின் பிரச்சாரம் இரண்டு வருடங்கள் நிறுத்தப்பட்டது. இப்போது அதை மீண்டும் வேகப்படுத்துகிறோம் என பிரதாப் கூறினார். மேலும் இது புனித பணி, நாட்டை கட்டியெழுப்பும் பணி, இது எனது தந்தையால் தொடங்கப்பட்டது. அதனுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன் எனவும் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் மதமாற்றம் அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை பிரதாப் கூறினார். ஒன்று கொரோனா தொற்று மற்றொன்று காங்கிரஸ் கட்சி என குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தொற்றை பயன்படுத்தி மிஷினரிகள் அவர்களை மதம் மாற்றுகின்றனர். அதற்கு காங்கிரஸ் துணை நிற்கிறது. அவர்களுக்கான நிதி இத்தாலியில் இருந்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read: ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..? 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை..
உதாரணமாக பங்சாப்பில் எத்தனை சீக்கியர்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பார்க்கலாம், காங்கிரஸ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மதமாற்றம் நடைபெறுகிறது என பிரதாப் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், சுவாமி தேவ் நந்த், ஆச்சார்யா அன்சுதேவ் ஆர்யா, ராஜேந்திர பாய் சாஹேப், ராமச்சந்திர அகர்வால், நந்தகுமார் சாய், பண்டிட் ரிஷிராஜ், பண்டிட் பங்கஜ் பரத்வாஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.