விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல்சோக்சியிடம் இருந்து இதுவரை 19,111 கோடி பறிமுதல்..?

பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகியோரின் 19,111.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் கூறுயையில், தப்பியோடிய 3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி மொத்தமாக வங்கிகளுங்கு 22,585,83 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். மார்ச் 15, 2022 நிலவரப்படி, பணமோசடி தடுப்பு சட்டத்தின் படி, 19,111,20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 15, 2022 நிலவரப்படி, மோசடி செய்யப்பட்ட மொத்த நிதியில் 84.61 சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பில் 66.91 சதவீதம் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது பறிமுதல் செய்யப்பட்ட 19,111,20 கோடி ரூபாயில் 15,113,91 கோடி ரூபாய் வங்கிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

Also Read: ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..? 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை..

மேலும் 335.06 கோடி ரூபாய் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் இந்திய அரசிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. SBI தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, அமலாக்க இயக்குனரகம் தங்களுக்கு ஒப்படைத்த சொத்துக்களை விற்று 7,975,27 கோடியை ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிப்ரவரியில் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி வழக்கில் சுமார் 18,000 கோடி ரூபாய் வங்கிகளுக்கு திருப்பி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் நீதிமன்றத்தால் நாடு கடத்தப்பட்ட விஜய் மல்லையா சட்டப்போராட்டத்தால் இன்னும் இந்தியாவிற்கு அனுப்பப்படவில்லை.

Also Read: இந்தியாவிற்கு வணக்கம் செலுத்துகிறேன்.. இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறப்பானது.. பாராட்டிய இம்ரான்கான்..

வைர வியாபாரி நீரவ் மோடியும் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க சட்டப்போராட்டத்தில ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் இவர் லண்டனின் வாண்ட்வொர்த் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மெகுல் சோக்கி 2021 ஆம் ஆண்டு ஆன்டிகுவாவில் காணாமல் போனார். பின்னர் டொமினிகாவில் பிடிபட்டார். இந்த நிலையில் மூவரையும் இந்தியா கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.