இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணனுடன் கைது செய்யப்பட்ட 2 மாலத்தீவு பெண்கள் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை..

இஸ்ரோ கிரையோஜெனிக் இஞ்சின் தொடர்பான தகவல்களை வெளிநாட்டுக்கு வழங்கியதாக 1994 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மற்றும் மாலத்தீவை சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது மாலத்தீவை சேர்ந்த அந்த இரு பெண்களும் நஷ்ட ஈடு கேட்டு உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1994 ஆம் ஆண்டு கிரையோஜெனிக் இஞ்சின் தொடர்பான விவரங்களை வெளிநாட்டுக்கு அளித்ததாக அப்போதைய இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மற்றும் மாலத்தீவை சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபுசியா ஹசன் ஆகியோரை கேரள காவல்துறை கைது செய்தது.

இந்த வழக்கில் கேரள காவல்துறை மீது குற்றச்சாட்டு இருந்ததால் அது குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையை அடுத்து இந்த வழக்கை CBI விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் குஜராத்தின் முன்னாள் டிஜிபி, கேரளாவின் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் ஓய்வு பெற்ற உளவுதுறை அதிகாரி உட்பட 18 பேர் மீது CBI வழக்கு பதிவு செய்தது.

அதில் குஜராத்தின் முன்னாள் டிஜிபி, முன்னாள் கேரள காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆகிய நான்கு பேருக்கும் கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து CBI தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலத்தீவை சேர்ந்த இரு பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட 18 பேர் ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு CBI மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

நம்பி நாராயணனுடன் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு பெண்களும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். பின்னர் பொய்யான குற்றச்சாட்டு என கூறி விடுதலை செய்யப்பட்டனர். தங்களை வேண்டும் என்றே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும், கேரள சிறையில் மனதளவிலும், உடல் அளவிலும் சித்ரவதை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Also Read: உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்த இந்தியா..

இந்த நிலையில் மாலத்தீவு பெண்களின் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் பிரசாத் காந்தி CBI மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நம்பி நாராயணனுக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணையம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டதை அடுத்து கேரள அரசு 1.30 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியுள்ளது.

Also Read: மிராஜ் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் விமானப்படையுடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம்..

Leave a Reply

Your email address will not be published.