புல்வாமாவில் நடந்த என்கவுண்டரில் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுகொலை..

புல்வாமாவின் மித்ரிகாம் பகுதியில் நடந்து வரும் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவின் மித்ரிகாம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முதல் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. நேற்று நடந்த என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளும் இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புல்வாமா மாவட்டத்தில் வெளி தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்தியவர்கள் என காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட இருவரும் அல் பத்ர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஐஜாஸ் ஹபீஸ் மற்றும் ஷாஹித் அயூப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலிஸ் விஜயகுமார் கூற்றுப்படி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ஆறாம் தலைமுறை போர் விமான தயாரிப்பில் இணைய உள்ள இந்தியா..?

மேலும் இரண்டு ஏகே 47 துப்பாக்கிகளையும் போலிசார் கைப்பற்றியுள்ளனர். சுற்றிவளைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் நடவடிக்கை இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வெளியேறி பின் மீண்டும் என்கவுண்டர் தொடங்கும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: பாரமுல்லாவில் 2 JeM பயங்கரவாதிகளை கைது செய்தது இந்திய இராணுவம்..

Leave a Reply

Your email address will not be published.