டி-90 டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. ஒருவர் படுகாயம்..

உத்திரபிரதேசத்தின் பாபினா இராணுவ கன்டோன்மென்டில் நடந்த வழக்கமான பயிற்சியின் போது டி-90 டேங்கின் பேரல் வெடித்ததில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒரு இராணுவ வீரர் பலத்த தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்திர பிரதேசத்தின் ஜான்சிக்கு அருகே உள்ள பாபினா கன்டோன்மென்டில் நேற்று மாலை வழக்கமான போர் பயிற்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக டி-90 டாங்கியின் பேரல் வெடித்ததில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொரு இராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த டி-90 டாங்கியில் 3 வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக டாங்கியில் பேரல் வெடித்து சிதறியது. காயமடைந்த மூவருக்கும் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பின்னர் இராணுவ மருத்துவமனையான பாபினாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொரு வீரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய இராணுவம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்த தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.