பாகிஸ்தான் எல்லை அருகே கைப்பற்றப்பட்ட 2,000 கிலோ போதைப்பொருள்..

பாகிஸ்தானை ஒட்டிய சர்வதேச கடல் எல்லையில் 2000 கோடி மதிப்பிலான சுமார் 750 கிலோ போதை பொருட்களை இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.

இந்த போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு மீன்பிடி படகில் கடத்தி வரப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில் 525 கிலோ உயர்தர ஹாஷிஷ் மற்றும் 234 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் ஆகும். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 2000 கோடி ரூபாய் ஆகும்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடற்படை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 750 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில் 525 கிலோ ஹாஷிஷ் மற்றும் 234 கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் ஆகியவை ஆகும். இதன் சர்வதேச மதிப்பு 2000 கோடி ஆகும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. மேலும் ஆழ்கடலில் தொடர்ந்து கண்காணிப்பு பணி ஈடுபடுத்தப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து போதைப்பொருள் கடத்தல் அதிகமாகியுள்ளது. பெரும்பாலும் பாகிஸ்தான் வழியாகவும், லட்சத்தீவு வழியாகவும் போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இதனை கண்காணிக்க ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.