22,000 கோடியில் உருவாக்கப்பட்ட பூர்வாஞ்சல் ஆறு வழிச்சாலை.. நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி..

உத்திர பிரதேசத்தில் பிரதமர் மோடியால் நவம்பர் 16 ஆம் தேதி அன்று திறந்து வைக்கப்பட உள்ள பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சலையை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார். பின்னர் பேசிய முதல்வர் இந்த சாலை கிழக்கு உத்திர பிரதேசத்தின் பொருளாதார முதுகெழும்பாக இருக்கும் என கூறினார்.

பூர்வாஞ்சல் விரைவுச்சாலை நிலத்தின் மதிப்பையும் சேர்த்து 22,494 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. லக்னோவின் சந்த் சாராய் எனும் இடத்தில் தொடங்கி காஜிபூர் மாவட்டத்தின் ஹைதரியா எனும் இடத்தில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் 340 கிலோ மீட்டர் ஆகும்.

இந்த பூர்வாஞ்சல் விரைவுச்சாலை ஆறு வழிச்சாலையாகும். மேலும் எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தச்சாலை முக்கிய விவசாய நகரங்களான அசம்கர், பாரபங்கி, அமேதி, சுல்தான்பூர், அயோத்தி, அம்பேத்கர் நகர், காஜிபூர் மற்றும் மௌ ஆகிய நகரங்களை லக்னோ உடன் இணைக்கிறது.

இந்த விரைவுச்சாலையின் மூலம் உணவு பதப்படுத்துதல், கிடங்கு, கைத்தறி, பால்பண்ணை போன்றவற்றில் முதலீடுகளை ஈர்க்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாலை நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தும், காற்றுமாசு மற்றும் விபத்துக்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.25 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடிக்கு நஷ்டம்..?

இந்த தேசிய நெடுஞ்சாலை 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கொரோனா தொற்று இருந்த போதிலும் 19 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் இந்த பூர்வாஞ்சல் விரைவுச்சாலை அவசரகாலங்களில் போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

Also Read: அக்டோபரில் GST வரி வருவாய் 1.30 லட்சம் கோடியை கடந்து சாதனை.. வளர்ச்சியில் பின்னோக்கி தமிழகம்..

இந்த பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் தொழில் மையங்கள் நிறுவப்படும் என யோகி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் கிழக்கு உத்திரபிரதேசத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் முதல்வர் தெரிவித்தார். இந்த தேசிய நெடுஞ்சாலையை நவம்பர் 16 அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம்..

Leave a Reply

Your email address will not be published.