போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய 2,399 வங்கதேசத்தினர்..
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டவிரோதமாக ஊடுருவிய 2,399 வங்கதேச நாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்திய ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தியதாக மத்திய அரசு செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச நாட்டினரை கண்டறிந்து சட்ட விதிகளின்படி அவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் சட்ட விதிகளின் படி குறிப்பிடப்பட்ட பகுதிகள், அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை கைப்பற்றுதல், போலி இந்திய ஆவணங்களை ரத்து செய்தல் மற்றும் சட்டத்தின் படி அவர்களை நாடு கடத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தவறான முறையில் ஆதார் அட்டையை பெற்ற இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் விவரங்களை உரிய சட்ட நடவடிக்கைக்காக UIDAI உடன் பகிர்ந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குடியேறிவர்களால் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், ரேஷன் கார்டுகள் போன்ற அடையாள ஆவணங்களை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஊடுருவல்களும் அதிகரித்து வருகின்றன. கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் உத்திரபிரதேச ஏடிஎஸ் நடத்திய விசாரணையில், அவர்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவி நாடு முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் வேலை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இவர்களில் பலருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.