இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு.. பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் இடையே கையெழுத்து..?
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், 42 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலிடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அடுத்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தை அறிவிக்க உள்ளார். இந்த நேரடி முதலீட்டின் மூலம் வளர்ச்சியும், ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் விரிவுபடுத்துவதையும் அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே இந்தியா வந்திருந்த போது 5 டிரில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்தார். இதன் மூலம் கார்பன் குறைப்பு தொடர்பான ஆற்றல் ஒத்துழைப்பு ஆவணம் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: ஆப்பிளின் iOS மற்றும் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக சொந்தமாக OS உருவாக்க உள்ள இந்தியா..?
மேலும் இந்தியாவின் நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஜப்பானின் ஷிங்கன்சென் புல்லட் ரயில் தொழிற்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அதிவேக ரயில்வே திட்டம் உட்பட பல திட்டங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜப்பானும் இந்தியாவும் கையகப்படுத்துதல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் இந்திய இராணுவம் மற்றும் ஜப்பான் இராணுவம் இடையே உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்களை பறிமாறி கொள்வதை அனுமதிக்கிறது.
Also Read: கூகுள் பே, PAYTM, போன் பேவிற்கு மாற்றாக UPI செயலியை துவக்க உள்ள டாடா..?
மேலும் இருநாட்டு தூதரக மற்றும் பாதுகாப்பு தலைவர்களுக்கு இடையே 2+2 சந்திப்பை விரைவில் நடத்துவதற்கு பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் ஒப்புகொள்வார்கள் என கூறப்படுகிறது. புமியோ கிஷிடா பிரதமராக மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.