மணிப்பூரில் சீனரை திருமணம் செய்த பெண்ணின் வீட்டில் இருந்து 500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன

மணிப்பூரின் மோரே நகரின் ஒரு வீட்டில் இருந்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து 54 கிலோ பிரவுன் சுகர் மற்றும் 154 கிலோ ஐஸ் மெத் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மணிப்பூரில் உள்ள அந்த வீட்டுக்கு சொந்தமான பெண் சீன நாட்டவரை திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் மியான்மரின் மாண்டலேயில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 500 கிலோ போதைப்பொருளை அசாம் ரைபிள்ஸ் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மணிப்பூர் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அசாம் ரைபிள்ஸ் மற்றும் காவல்துறை மியான்மரில் இருந்து கடத்திவரப்பட்ட 2,300 கோடி மதிப்புள்ள 500 கிலோ பிரவுன் சுகர் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் மியான்மரில் இருந்து வடகிழக்கு எல்லை மாநிலங்களான மணிப்பூர், நாகலாந்து மாநிலங்கள் வழியே போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் மாவோயிஸ்டுகள் மூலம் இந்திய எல்லைக்குள் வருவதாக கூறப்படுகிறது.

Also Read: நாகலாந்தில் மாவோயிஸ்டுகள் என தவறாக நினைத்து தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 14 பேர் பலி..

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையால் தான் 46 அசாம் ரைபிள்ஸ் மீது தாக்குதல், சமீபத்தில் திரிபாதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. மணிப்பூரில் இருந்து சிலிகுரி, கவுகாத்தி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு போதைப்பொருட்களை கடத்தும் போதைப்பொருள் தலைவன் எம்டி காசிம் அலியை டெல்லி போலிசார் நவம்பர் 27 அன்று கைது செய்தனர். இதன் பின்னணியில் சீனா இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Also Read: மணிப்பூரில் உலகிலேயே மிக உயரமான இரயில் தூண் பாலத்தை கட்டமைத்து வரும் இந்தியன் ரயில்வே..

Leave a Reply

Your email address will not be published.