முதன்முறையாக கிராமத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 5G தொழிற்நுட்பம்.. 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டியும் சோதனை..
கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்புக்கான நாட்டின் முதல் 5G சோதனை குஜராத்தில் உள்ள கிராமத்தில் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையை டெலிகாம் துறை மற்றும் தொலைதொடர்பு துறை (DoT) இணைந்து நடத்தியுள்ளது.
இதற்கு முன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெருநகரங்களில் 5G சோதனையை செய்துள்ள நிலையில், முதன்முறையாக கிராமத்தில் 5G சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை குஜராத்தின் அஜோல் கிராமத்தில் வியாழன் அன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்கான அடிப்படை ட்ரான்ஸ்ஸீவர் நிலையம் (BTS) காந்திநகர் மாவட்டத்தில் உனவா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் டெலிகாம் துறை, குஜராத் தொலைதொடர்புத்துறை மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் நோக்கியா உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது பதிவிறக்கம் 105.47 Mbps வேகமும், பதிவேற்றம் 58.77 Mbps வேகமும் பதிவாகியுள்ளது. நவம்பர் 19 அன்று குஜராத் தொலைதொடர்பு துறை (DoT) காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் 5G தளத்தில் இணைய வேகத்தை சோதனை செய்தபோது, இணைய வேகம் 1.5 Gbps வரை தொட்டது. இது 4G யை விட 100 மடங்கு வேகமாக இருந்தது.
இந்த 5G சோதனையில் 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி கன்டென்ட் பிளேபேக், விர்ச்சுவல் ரியாலிட்டி இணைக்கப்பட்ட வகுப்பறை, 5G அதிவேக கேமிங், செயற்கை நுண்ணறிவு உதவி மூலம் 360 டிகிரி கேமராக்கள் நிகழ்நேர வீடியோ ஸ்ட்ரீம்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டன. பயனர்கள் 360 அனுபவத்தை பெற முடியும். அங்கு பயனர்கள் குறிப்பிட்ட சூழலில் பொருட்களையும் நபர்களையும் அடையாளம் காண முடியும்.
Also Read: மின்சார வாகனம் மற்றும் சார்ஜிங் துறையில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள டாடா..
இந்த சோதனை டெலிகாம் துறை மற்றும் DoT குழுவின் பிரதிநிதிகள் அஜதசத்ரு சோமானி, ரோசன் வால் மீனா, இயக்குனர் சுமித் மிஷ்ரா மற்றும் விகாஸ் தாதிச் மற்றும் வோடபோன் ஐடியா மற்றும் நோக்கியா தொழிற்நுட்ப குழுவினர் முன்னிலையில் அஜோல் கிராமத்தில் சோதனை நடத்தப்பட்டது.
Also Read: உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஹைப்பர்லூப்..? மும்பை-புனே வெறும் 20 நிமிடத்தில் பயணம்.