கர்நாடகாவில் மைனர் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 சிறுவர்கள்.. கைது செய்து சிறையில் அடைப்பு..
கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு சிறுவர்களை கர்நாடக போலிசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் 6 குற்றவாளிகளால் 15 வயது சிறுமி மூன்று மாதத்திற்கும் மேலாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர ஞாயிற்றுகிழமை தார்வாட்டில் உள்ள ஷஹர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் 6 சிறுவர்களையும் போலிசார் கைது செய்து காவலில் எடுதுள்ளனர். போலிசாரின் கூற்றுப்படி, சிறுமி 6 சிறுவர்களில் ஒருவனை காதலித்துள்ளார். சிறுவனுடன் சிறுமி தனிமையில் இருந்த போது மற்ற சிறுவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் வீடியோவை சமூகவலைதலங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி சிறுமியை 6 சிறுவர்களும் மூன்று மாதங்களுக்கு மேலாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதுபற்றி கூறினால் வீடியோவை சமூக ஊடகங்களில் பரவ விட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
Also Read: லவ் ஜிகாத்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி கான்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
சிறுமி அளித்த வாக்குமூலத்தில், தான் பக்கத்து வீட்டு பையனை காதலிப்பதாகவும், அவனுடன் நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோ எடுத்து தன்னை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், தனது வீடியோ சமூக வலைதலங்களில் பரவி விடுமோ என்ற அச்சத்தில் தனக்கு நேர்ந்ததை யாரிடமும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
Also Read: பட்டுக்கோட்டையில் உறவினரை காப்பாற்ற 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து தார்வாட் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிசிங்கேரியில் இருந்து ஆறு சிறுவர்களையும் போலிசார் கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் சிறுவர்கள் என்பதால் அவர்கள் பெயர்களை வெளியிடவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவுக்கு சமாஜ்வாதி MP ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு..