ராய்பூர் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 6 CRPF வீரர்கள் காயம்..

ராய்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 6 மத்திய ரிசர்வ் போலிஸ் படையினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராய்பூர் ரயில் நிலையத்தில் 211வது பட்டாலியனை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலிஸ் படையினர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் கையெறி குண்டு, டெட்டனேட்டர் உள்ளிட்ட ஆயுதய்களையும் இரயிலில் ஏற்றி கொண்டுருந்தனர்.

அப்போது ராய்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற்றி கொண்டிருந்த டெட்டனேட்டர் பெட்டி ஒன்று தவறுதலாக கிழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் காயமடைந்த CRPF வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read: மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..

இந்த விபத்தில் 29 டெட்டனேட்டர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. தற்போது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து இருப்பதால் ஆயுதங்களுடன் CRPF வீரர்கள் ஜம்மு காஷ்மீரை நோக்கி அனுப்பப்படுகின்றனர். நேற்று தீவிரவாதிகள் உடனான துப்பாக்கி சூட்டில் இரண்டு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம்..

இந்த நிலையில் தான் ராய்பூர் ரயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என மக்கள் அஞ்சிய நிலையில் பின்பு இராணுவம் தரப்பில் விபத்து என கூறப்பட்டது. இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

Also Read: தமிழகத்தின் மதுரையில் ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தது NIA.. பாய்ந்தது UAPA..

Leave a Reply

Your email address will not be published.