இலங்கையை தொடர்ந்து துருக்கியின் பணவீக்கம் 70% அதிகரிப்பு..

கடந்த மாதம் துருக்கியின் வருடாந்திர பணவீக்கம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் 69.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. துருக்கியின் நாணய வீழ்ச்சி மற்றும் ரஷ்யா உக்ரைன் மோதல் காரணமாக எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கடைசியாக 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆண்டு பணவீக்கம் 73.1 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 69.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனாதிபதி எர்டோகனுக்கு விலைவாசி உயர்வு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எர்டோகன் முதன்முதலில் 2003 ஆம் ஆண்டு பிரதமராக பதவிக்கு வந்தார். பின்னர் நாட்டை ஜனாதிபதி முறைக்கு மாற்றினார். செப்டம்பர் மாதம் மத்திய வங்கி ஜனாதிபதி எர்டோகனால் நீண்ட காலமாக கோரிய 500 அடிப்படை புள்ளிகளை தளர்த்தும் சுழற்சியை மேற்கொண்ட பிறகு துருக்கி நாணயமாக லிரா வீழ்ச்சி அடைந்து வருகிறது.

Also Read: கர்நாடகாவில் அமைகிறது இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை..!

மேலும் கடந்த ஆண்டு ஜனாதிபதி அழுத்தத்தின் காரணமாக செய்யப்பட்ட வழக்கத்திற்கு மாறான வட்டி விகித குறைப்பு பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 7.25 சதவீதம் என்ற வகையில் விலைவாசி உயர்ந்து வருகிறது. ஜனாதிபதியின் தவறான கொள்கை மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எரிசக்தி விலைகள் உட்பட போக்குவரத்து துறையில் விலைவாசி 105.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலைகள் 89.1 சதவீதம் உயர்ந்துள்ளது. மாதந்தோறும் உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 13,38 சதவீதமும், வீடுகளின் விலை 7.43 சதவீதமும் உயர்ந்து வருகிறது. டாலருக்கு நிகரான துருக்கியின் லிராவின் மதிப்பு 0.9 சதவீதம் குறைந்து 14,85 ஆக உள்ளது.

Also Read: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1 மில்லியன் ஐபோன்களை ஏற்றுமதி செய்த ஆப்பிள் நிறுவனம்..

வீட்டு வரவு செலவு திட்டங்களின் சுமையை குறைக்க அடிப்படை பொருட்களுக்கான வரிக்குறைப்புகள் மற்றும் சில மின் கட்டணங்களுக்கான அரசு மானியங்கள் வழங்கப்பட்ட போதும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போரால் பணவீக்கம் அதிகரித்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் துருக்கியின் பணவீக்கம் 52 சதவீதமாக குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.