இந்தியாவில் 76,000 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே உற்பத்தி PLI திட்டத்திற்கு ஒப்புதல்..

நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே உற்பத்திக்காகவும், பெரிய சிப் தயாரிப்பு நிறுவனங்களை ஈர்க்கவும் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கான 76,000 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஹைடெக் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றவும், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தன்னிறைவு அடையைவும் இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்தின் மூலம் 35,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை சார்ந்து இருப்பதை குறைப்பதற்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கார்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை பயன்படுத்தப்படும் முக்கிய அங்கமான குறைகடத்திகளின் கடுமையான நெருக்கடியை உலகம் தற்போது சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் PLI திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் குறைகடத்தி உற்பத்தியில் 76,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்த லட்சிய திட்டத்திற்கு செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே மேனஃபேக்ச்சரிங் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

சிலிகான் செமிகண்டக்டர் ஃபேப்ஸ், டிஸ்பிளே ஃபேப்ஸ், சிலிகான் ஃபோட்டானிக்ஸ், சென்சார்கள் ஃபேப்ஸ், செமிகண்டக்டர் பேக்கேஜிங் மற்றும் செமிகண்டக்டர் டிசைன் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குறைகடத்தி ஊக்கத்தொகை திட்டம் நடைமுறையில் இருப்பதால் அடுத்த நான்கு ஆண்டுகளில் 1.7லட்சம் கோடி முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ரூபேவின் அசுர வளர்ச்சி.. மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசாவும் அமெரிக்க அரசாங்கத்திடம் ரூபே மீது புகார்..

நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கிரீன்ஃபீல்ட் செமிகண்டக்டர் ஃபேப்கள் மற்றும் இரண்டு டிஸ்பிளே ஃபேப்களை அரசு எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் 15 யூனிட் காம்பவுண்ட் செமிகண்டக்டர்கள், மற்றும் செமிகண்டக்டர் பேகேஜிங்கை இந்த திட்டத்தின் கீழ் அரசு ஆதரவுடன் நிறுவ உள்ளதாக கூறப்படுகிறது.செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு உலகளாவிய போட்டி ஊக்கத்தொகையை வழங்குவதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் ஒரு புதிய சகாப்தத்தை இந்த திட்டம் உருவாக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியா RCEP வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான நடவடிக்கை என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பாராட்டு..

இஸ்ரேலின் டவர் செமிகண்டக்டர், ஆப்பிளின் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் மற்றும் சிங்கப்பூரை தளமாக கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் குறைகடத்கி ஃபேப்ரிகேஷன் யூனிட்களை அமைப்பதில் ஆர்வம் தெரிவித்துள்ளன. மேலும் டாடா குழுமம் செமிகண்டக்டர் உற்பத்தியில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒரு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக இந்தியாவில் 530 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள ஹூண்டாய் நிறுவனம்..

அடுத்த 6 ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை 75 பில்லியன் டாலரில் இருந்து 300 பில்லியன் டாலராக உயர்த்த அரசு இலக்கு வைத்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சக அறிக்கையின் படி, அடுத்க நான்கு ஆண்டுகளில் இரண்டு பெரிய செமிகண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் இரண்டு பெரிய டிஸ்பிளே உற்பத்தி அலகுகள் ஒவ்வொன்றும் 30,000-50,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் 5 டிரில்லியன் ஜிடிபி இலக்கை அடைய இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.