கால்வான் மோதலுக்கு பிறகு 14,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஃபீல்ட் டிரஸ்ஸிங் ஸ்டேஷன்..

கால்வானில் சீன இராணுவம் உடனான மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்ல் இந்திய இராணுவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஃபீல்ட் டிரஸ்ஸிங் ஸ்டேஷனை (FDS) திறந்துள்ளது.

20 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவ வசதி மையம், ஒரு வழக்கமான கள மருத்துவமனை போன்று அனைத்து வகையான சிகிச்சைகளையும் பெற்றுகொள்ள முடியும். இந்த மருத்துவமனை 14,000 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு உயரத்தில் மருத்துவ வசதி திறப்பது இதுவே முதல்முறை.

அதிக உயரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு தாழ்வெப்பநிலை மற்றும் பிற காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் தற்போது 14,000 உயரத்தில் மருத்துவ வசதி அமைக்கப்பட்டுள்ளதால் இனி வீரர்கள் இந்த கள மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும்.

சீன இராணுவத்தின் உடனான மோதலின் போது கூட கால்வான் பள்ளத்தாக்கில் கள மருத்துவமனை இல்லாதது கணிசமான சிரமங்களை ஏற்படுத்தியது. உலகிலேயே உயரமான இடங்களில் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மைனஸ் வெப்பநிலைகளில் தாழ்வெப்பநிலை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது வீரர்களின் உடல் வெப்பத்தை வேகமாக இழக்க செய்யும். இதனால் ஆபத்தான நிலையில் முடியலாம்.

தாழ்வெப்பநிலை தவிர, சுடப்பட்டாலோ அல்லது காயம் அடைந்தாலோ வீரர்கள் விமானம் மூலம் அல்லது சாலை வழியாக 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லே கள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். கடந்த ஜூன் 2020 ஆம் ஆண்டு கால்வான் மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு ஆகஸ்ட் மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

1975க்கு பிறகு முதல் முறையாக கால்வானில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சீனா தற்போது ஆத்திரமூட்டும் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் கால்வானில் 14,000 அடி உயரத்தில் மருத்துவ வசதி அமைக்கப்பட்டுள்ளது.

One thought on “கால்வான் மோதலுக்கு பிறகு 14,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஃபீல்ட் டிரஸ்ஸிங் ஸ்டேஷன்..

Leave a Reply

Your email address will not be published.