சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது..

மும்பைபில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

FTV சார்பில் கோர்டிலியா குருஸ் சொகுசு கப்பலில் ஆடம்பர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மும்பை போலிசார் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கொக்கைன், எக்ஸ்டசி, மெபிட்ரோன் மற்றும் சாராஸ் ஆகிய போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ரைடில் ஷாருக்கானின் மகன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். எட்டு பேரில் மூன்று பேர் இளம்பெண்கள் ஆவார்கள். இந்த மூன்று இளம்பெண்களும் கப்பல் பயணத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்துள்ளனர். இவர்களில் சிலர் முக்கிய தொழிலதிபர்களின் மகள்கள் என கூறப்படுகிறது.

ஆர்யான் கானின் மொபைல் பறிமுதல் செய்யப்பட்டு உரையாடல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஆர்யான் கான் உட்பட எட்டு பேரும் போதை பொருட்களை எடுத்து கொண்டனரா என மருத்துவ சோதனையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த FTV இந்தியாவின் நிர்வாக இயக்குனர் காஷிப் கானிடமும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கும் மருத்துவ சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோர்டிலியா குருஸ் கப்பல் அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவாக்கு புறப்பட்டு அக்டோபர் 4 ஆம் தேதி மும்பைக்கு திரும்பும். இந்நிலையில் ரகசிய தகவலை அடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பயணிகள் வேடமிட்டு சொகுசு கப்பலில் ஏறினர்.

Also Read: ஏலத்தில் டாடா வெற்றி.. 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உரிமையாளரிடமே சென்ற ஏர் இந்தியா நிறுவனம்..?

கப்பல் மும்பையில் இருந்து நடுகடலுக்கு சென்ற பிறகு இசை நிகழ்ச்சி ஆரம்பித்து உள்ளது. இதில் போதை பொருட்கள் பயன்படுத்தியதை அடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தான் ஷாருக்கான் மகன் உட்பட எட்டு பேரை போலிசார் கைது செய்தனர். மேலும் கோர்டிலியா குருஸ் கப்பலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஜூர்கன் பைலோம் என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: குஜராத் அருகே பிடிபட்ட 3,000 கிலோ போதைப்பொருள்..? தாலிபான்களுக்கு தொடர்பு..

மூன்று நாள் பயணமான இந்த கப்பலில் பாப் இசை, பேஷன் ஷோ மற்றும் டான்ஸ் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளும் FTV சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலிசார் கூறுகையில், எட்டு பேரிடமும் விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாகவும் இன்னும் வழக்கு பதியவில்லை எனவும் கூறினர்.

Also Read: வானியல் ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியாவின் லடாக் ஆய்வகம் சிறந்த இடம்: ஆராய்ச்சியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published.