இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் கைப்பற்றிய அதானி குழுமம்..

இஸ்ரேலின் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவின் அதானி போர்ட்ஸ் மற்றும் உள்ளுர் இரசாயனங்கள் மற்றம் தளவாட குழுவான கடோட் ஆகியவை டெண்டரை வென்றுள்ளதாக இஸ்ரேலின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடோட் மற்றும் அதானி இரண்டு வருட டெண்டர் செயல்முறையின் முடிவில், இறக்குமதி விலைகளை குறைக்கவும், இஸ்ரேலிய துறைமுகங்களில் நீண்ட நேர காத்திருப்பு நேரத்தை குறைக்க உதவும். மேலும் ஹைஃபா துறைமுகத்தின் தனியார் மயமாக்கல் துறைமுகங்களில் போட்டியை அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கை செலவை குறைக்கும் என இஸ்ரேலிய நிதியமைச்சர் அவிக்டோர் லிபர்மேன் தெரிவித்துள்ளார்.

ஹைஃபா துறைமுகத்தின் பங்குகளில் அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் 70 சதவீதமும், கடோட் 30 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து பயன்பாடு என கூறியுள்ள அதானி போர்ட்ஸ் உலகளாவிய துறைமுக குழுவாக மாற முயற்சித்து வருவதாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி கரண் அதானி மே மாதம் தெரிவித்து இருந்தார்.

இஸ்ரேல் அதன் அனைத்து வகையான வணிகத்தையும் கிட்டத்தட்ட 98 சதவீதம் கடல் வழியாகவே மேற்கொள்கிறது. ஹைஃபா போர்ட் கூறுகையில், புதிய குழு 2054 ஆம் ஆண்டு வரை துறைமுகத்தை இயக்கும் எனவும் வெற்றி பெற்ற ஏலம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

ஹைஃபா துறைமுகம் அஷ்டோத் துறைமுகத்திற்கு பிறகு இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும். கடந்த ஆண்டு மொத்த சரக்குகளில் 47 சதவீதம் ஹைஃபா துறைமுகம் வழியாக சென்றுள்ளது. சரக்கு துறை மட்டுமல்லாமல், ஹைஃபா துறைமுகம் இஸ்ரேலில் பயணிகள் போக்குவரத்தின் முக்கிய துறைமுகமாகும்.

அதானி குழும தலைவர் கௌதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்தை தனியார் மயமாக்குவதற்கான டெண்டரை எங்கள் கூட்டாளி கடோட்டுடன் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கும் மகத்தான மூலோபாய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.

ஹைஃபா துறைமுகத்தை வென்றது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியாகவும், சீனாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஜூன் 2019 ஆம் ஆண்டு ஹைஃபா துறைமுத்தின் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்காக ஷாங்காய் சர்வதேச துறைமுக குழு என கூறப்படும் சீன துறைமுக மேலாண்டை நிறுவனத்துடன் இஸ்ரேல் 25 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது தனது நாட்டு கப்பல்களை உளவு பார்க்க வழிவகுக்கும் என அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.