அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி..!

அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் அக்னி-4 ஏவுகணை இன்று ஒடிசாவின் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுதங்களை சுமந்து 4,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணை, இன்று மாலை 7.30 மணி அளவில் ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனையானது மூலோபாய படைகளின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பயிற்சி சோதனையாகும். சோதனையானது அனைத்து செயல்பாட்டு அளவுருக்களையும் கணினியின் நம்பகத்தன்மையையும் உறுதிபடுத்தியது.

மேலும் இந்த வெற்றிகரமான சோதனையானது, நம்பகமான குறைந்த பட்ச தடுப்பு திறன் கொண்ட இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அக்னி-4 ஏவுகணையானது DRDO வால் வடிவமைக்கப்பட்டு பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.

Also Read: லக்னோ ஆலையில் ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்க திட்டம்..?

66 அடி நீளம் கொண்ட இந்த ஏவுகணையின் நிறை 17,000 கிலோகிராம் ஆகும். இந்த ஏவுகணை 4,000 கிலோமீட்டர் தூரமும், 900 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து இலக்கை தாக்ககூடியது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஏவும் போது சீனாவின் அனைத்து பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்திய விமானப்படைக்கு புதிதாக 6 எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க உள்ள IAF..

Leave a Reply

Your email address will not be published.