இந்திய விமானப்படைக்கு ADS வழங்குவதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெலாரஸ் இடையே ஒப்பந்தம்..
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களுக்கான ஏர்போர்ன் டிஃபென்ஸ் சூட் (ADS) வழங்குவதற்காக பெலாரசின் இரண்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பெங்களுருவை தலைமையிடமாக கொண்ட பாதுபாப்பு பொதுத்துறை நிறுவனமாக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெடின் இணை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், பெலாரசின் டிஃபென்ஸ் இனிசியேடிவ் (DI) மற்றும் டிஃபென்ஸ் இனிசியேடிவ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக பெலாரஸ் மற்றும் ஏரோ பிரைவேட் லிமிடெட் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கான ஏர்போர்ன் டிஃபென்ஸ் சூட் வழங்குவதற்கான நோக்கமாக கொண்டுள்ளது. இதில் பாரத் நிறுவனம் முதன்மை ஒப்பந்ததாரராக இருக்கும். மேக் இன் இந்தியா பிரிவின் கீழ் ஹெலிகாப்டர்களுக்கான மேம்பட்ட எலக்ட்ரானிக் வார்ஃபேர் சூட்களை வழங்குவதற்கான உற்பத்தி மற்றும் பராமரிப்புடன் டிஃபென்ஸ் இனிசியேடிவ் நிறுவனத்தால் ஆதரிக்கப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏடிஎஸ்க்கான பல்வேறு வணிக வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. பாதுகாப்பு துறையின் கூடுதல் செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் ராணுவ ஒத்தழைப்புக்கான இந்தோ பெலாரஸ் கூட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கூட்டாண்மை உருவாகியுள்ளது.
கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பாரத் நிர்வாக இயக்குனர் மனோஜ்குமார் மற்றும் துணை இயக்குனர் ஜெனரல் ரோமன் கோமிசாரோ, இணை செயலாளர் அனுராக் பாஜ்பாய் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.