பூடான் சீனா இடையே ஒப்பந்தம்.. உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா..

பூட்டானும் சீனாவும் எல்லை தொடர்பான பிரச்சனைகளில் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்த “மூன்று படி சாலை வரைப்படம்” என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.

வியாழக்கிழமை பூடான் மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பூட்டானும் சீனாவும் 1984 ஆம் ஆண்டில் இருந்தே எல்லை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேபோல் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பூட்டானிடம் இராணுவம் இருந்தாலும் அதன் எல்லையையும் இந்திய இராணுவம் தான் பாதுகாத்து வருகிறது. பல நாடுகள் இந்தியா மூலமாகவே பூட்டானிடம் பேசி வருகின்றனர். ஏனெனில் அந்த நாடுகளுக்கு பூடானில் தூதரகம் இல்லை. இந்தியாவில் உள்ள தூதரகம் மூலமாகவே நட்புறவை வளர்த்து வருகின்றனர்.

Also Read: இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது..

கடந்த 2017 ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இந்தியா சீனா இடையே பல மாதங்களாக மோதல் நிலவியது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் படைகளை விலக்கினர். சிக்கிம் மாநிலத்திற்கு அருகே உள்ள இந்த டோக்லாம் பீடபூமி இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனை கைப்பற்ற சீனா முயன்றபோது தான் மோதல் வெடித்தது.

Also Read: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு.. சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஆலோசனை..

டோக்லாம் பீடபூமியை கைப்பற்றிவிட்டால் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்றி விடலாம் என சீனா நினைக்கிறது. வியாழக்கிழமை நடைப்பெற்ற ஒப்பந்தத்தில் பூட்டானின் வெளியுறவு அமைச்சர் மற்றும் சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் ஆகிய இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீன தூதர் மற்றும் இந்தியாவுக்கான பூட்டான் தூதர் வெட்சாப் நமக்யெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read: இந்திய விண்வெளி சங்கத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. விண்வெளித்துறையில் புதிய மைல்கல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *