ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி..?

பணமோசடி வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்தால் வெளிநாடு செல்லாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்திக் சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் நிதித்துறை அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு உதவி செய்ததாக ப.சிதம்பரம் மீது வழக்கு பதிந்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கார்த்திக் சிதம்பரம் லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானநிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் 22 நாட்கள் இருந்த நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது தந்தை ப.சிதம்பரமும் 2019 ஆம் ஆண்டு 100 நாட்கள் திகார் சிறையில் இருந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல வேண்டுமானால் 2 கோடி டெபாசிட் செய்ய கூறப்பட்டது. பின்னர் அவர் 1 கோடி டெபாசிட் செய்தால் வெளிநாடு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Also Read: 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி, WHO பாராட்டு..

அமலாக்கத்துறையின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் கூறுகையில், கார்த்திக் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், சம்மனுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் வாதிட்டார். இருப்பினும் கார்த்திக் சிதம்பரம் மீதான குற்றச்சாட்டை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தால் மட்டுமே விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Also Read: OTT, கிரிப்டோ கரன்சி மற்றும் மொபைல் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்: RSS தலைவர் மோகன் பகவத்

Leave a Reply

Your email address will not be published.