ஆகாஷ் ஏவுகணையை இந்திய இராணுவத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி.. கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது..

இந்திய இராணுவத்திற்காக 5,317 கோடி ரூபாய் மதிப்பில் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்த ஆகாஷ் ஏவுகணையை இராணுவத்திற்கு வழங்குவதற்கான விழா வியாழன் அன்று நடைபெற்றது.

இதில் AVSM டைரக்டர் ஜெனரல் மற்றும் A.P.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆகாஷ் ஏவுகணை அதிகபட்சமாக 25 – 30 கி.மீ தூரம் வரை தாக்குதல் நடத்தக்கூடியது மற்றும் இது 2.5 மேக் வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த ஆகாஷ் ஏவுகணை DRDO-வால் வடிவமைக்கப்பட்டு பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் சில தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணையில் 96 சதவீதம் உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஆகாஷ் ஏவுகணையை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அமைச்சரவை அனுமதி வழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுகணை ஹைத்ராபாத்தில் உள்ள பாரத் நிறுவனத்தின் கிளையில் தயாரிக்கப்படுகிறது.

இதன் மேம்பட்ட வடிவமான ஆகாஷ் NG ஏவுகணையும் DRDOவால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த ஏவுகணை இந்திய இராணுவத்திற்கு மட்டுமில்லாமல் ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது.

இந்த ஏவுகணை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இது தரையில் இருந்து 20 கி.மீ உயரம் வரை தாக்குதல் நடத்தக்கூடியது. இந்த ஏவுகணையை இந்திய இராணுவம் மற்றும் விமானப்படையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *