உ.பியில் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து சொந்த வீட்டையே இடித்து தள்ளிய ஆலம் சித்திக்..

புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து தனது சொந்த வீட்டையே புல்டோசரால் இடித்து தள்ளிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. புல்டோசர் பாபா என அழைக்கப்படும் சட்டவிரோதமாக கட்டியுள்ள கட்டிடங்களை உத்திரபிரதேச அரசு புல்டோசர்களை கொண்டு இடித்து வருகிறது.

சிறையில் அடைக்கப்பட்ட மாஃபியா டான் மற்றும் MLA முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளரான ஆலம் சித்திக், புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து லக்னோவில் உள்ள அவரது சொந்த வீட்டை அவரே புல்டோசர் கொண்டு இடித்துள்ளார். காஜிபூரில் உள்ள லால் பாக் பகுதியில் வசித்து வரும் சித்திக், 2014 ஆம் ஆண்டு லக்னோ மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் அப்போதைய அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத கட்டிடத்தை கட்டியுள்ளார்.

இந்த நிலையில் முக்தார் அன்சாரியின் சொத்து விவரங்களை அமலாக்க இயக்குனரகம் கேட்டதை அடுத்து இந்த சட்டவிரோத கட்டிட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பிறகு லக்னோ மேம்பாட்டு அணையம் சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை எச்சரித்தும் சித்திக் கண்டுகொள்ளவில்லை.

Also Read: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்..? உளவுத்துறை எச்சரிக்கை..

இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் சித்திக் நடவடிக்கை எடுக்க தவறியதால், லக்னோ மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் உதவியுடன் கட்டிடத்தை இடிக்க முயன்றனர். ஆனால் சித்திக் பலமுறை கெஞ்சியும் பலனில்லாததால் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து தனது சொந்த கட்டிடத்தையே புல்டோசர் கொண்டு இடித்துள்ளார்.

இந்த கட்டிடம் 2014 ஆம் ஆண்டு சமாஜ்வாடி ஆட்சியில் முறைக்கேடாக கட்டப்பட்டுள்ளது. மேலும் உத்திரபிரதேச அரசு சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்துக்களை காலி செய்ய புல்டோசர்களை கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களின் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களுக்கு எதிராக மட்டுமே புல்டோசர்களை கொண்டு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?

இதேபோல் சமீபத்தில் பதேபூரில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர். புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து கிஷன்புர் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பதேபூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். யோகி ஆதித்யநாத்தின் இந்த புல்டோசர் நடவடிக்கையால் குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.