ஒரே இரவில் அனைத்து ஊழியர்களும் ராஜினாமா.. அடிவாங்கிய சீன செமிகண்டக்டர் துறை..

பிடன் நிர்வாகம் கடந்த வாரம் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் நோக்கம் அமெரிக்காவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கும், செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை தடுத்து நிறுத்துவதும் ஆகும்.

சீனாவின் செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் பணிபுரியும் அனைத்து அமெரிக்க நிர்வாகிகள், பொறியாளர்களும் நேற்று ராஜினாமா செய்தனர். ஒரே இரவில் அமெரிக்கா சீனாவின் செமிகண்டக்டர் உற்பத்தியை முடக்கியதாக லிடாங்ஸ் என்பவர் ட்விட்டர் பக்கித்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரோடியம் குழும ஆய்வாளர் ஜோர்டான் ஷ்னீடர் மொழி பெயர்த்துள்ளார்.

சீனாவுக்கு சொந்தமான யாங்சே மெமரி டெக்னாலஜிஸ் அண்ட் கோ மற்றும் சீனாவில் உள்ள மற்ற 30 செமிகண்டக்டர் நிறுவனங்களும் அமெரிக்க வர்த்தக துறையின் ஒரு பிரிவான தொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தால் சரிபார்க்கப்படாத பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், திறமையான செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை இயக்க அல்லது பயிற்றுவிக்க தேவையான அதிநவீன செயலிகளை சீனாவுக்கு அனுப்புவதில் இருந்து வணிக நிறுவனங்களை தடுக்கிறது.

இந்த புதிய சட்டத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய் நாடுகள் முன்னேறும் நிலையில் சீனா பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் சிப் உற்பத்தி கருவிகள், வடிவமைப்பு மற்றும் மென்பொருளின் ஏற்றுமதியும் தடைசெய்யப்படுகிறது.

அமெரிக்கர்கள் ராஜினாமா செய்ய முக்கிய காரணம், புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் சீனாவில் பணிபுரியும் எந்தவொரு அமெரிக்க குடிமகனும் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவரும் சீன செமிகண்டக்டர் துறையில் பணியாற்ற முடியாது அல்லது அமெரிக்க குடியுரிமையை இழக்கும் அபாயம் உள்ளதால் அனைவரும் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சீனா, இத பனிப்போர் சிந்தனை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இறுக்கமான உறவுகளை சரிசெய்வதற்கான முயற்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் சிப் உற்பத்தியில் தன்னிறைவு அடைய சிப் மற்றும் சயின்ஸ் சட்டத்தில் அதிபர் பிடன் கையெழுத்திட்டார். சிப் மேம்பாட்டிற்காக 52 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.