உத்திரபிரதேசத்தில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கை அறிவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்..

உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் லக்னோ, பிரக்யாராஜ், வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் இன்று இரவு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அலகாபாத் உயர்நீதிமன்றம் லாக்டவுன் அறிவித்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் மருத்துவம், சுகாதாரம், பொது போக்குவரத்து உட்பட அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்திற்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை செயல்பட தடை என கூறப்பட்டுள்ளது. மேலும் மால்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மளிகை கடைகள் மூடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மருந்து கடைகள் திறந்திருக்கும். மேலும் ஏப்ரல் 26 வரை மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் திருமணங்களுக்கு அனுமதி இல்லை. ஏற்கனவே பதியப்பட்ட திருமணத்திற்கு மாவட்ட நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அத்தகைய திருமணத்தில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பால், பழங்கள், காய்கறி கடைகள் என அனைத்தும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழிகாட்டுதலுடன் தடுப்பூசி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமாறு அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில் நீதிமன்றம் இந்த ஊரடங்கை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *