ஆல்ட் நியூஸ் ஜுபைர் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு..

அகமதாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச், மஹந்த் பஜ்ரங் முனி உதாசின், ராஷ்டிரிய ஹிந்து ஷேர் சேனாவின் ராஷ்டிரிய சன்ரக்‌ஷக் மற்றும் யதி நரசிங்கானந்த் ஆகியோருக்கு எதிரான அவதூறு குற்றசாட்டுகளுக்கு எதிரான வழக்கில் ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் தாக்கல் செய்த ரிட் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை தள்ளுபடி செய்தது.

ஜூன் 1 அன்று உத்திரபிரதேசத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தின் கைராபாத் காவல்துறை, மஹந்த் பஜ்ரங் முனி உதாசின், ராஷ்டிரிய ஹிந்து ஷேர் சேனாவின் ராஷ்டிரிய சன்ரக்‌ஷக் மற்றும் யதி நரசிங்கானந்த் ஆகியோருக்கு எதிராக இழிவான வார்த்தையை பயன்படுத்தியதற்காக ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது FIR பதிவு செய்தது.

சுவாமி ஆனந்த் ஸ்வருப், ராஷ்ட்ரிய இந்து ஷேர் சேனாவின் மாவட்ட தலைவர் பகவான் ஷரண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 295 (ஏ) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 67ன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜுபைரின் வழக்கறிஞர், ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர், தனது ட்வீட் மூலம் ஒரு வகுப்பினரின் மத நம்பிக்கையை அவமதிக்கவில்லை. அவரை துன்புறுத்தும் நோக்கத்திலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் மீதான FIRஐ ரத்த செய்ய வேண்டும் என வாதாடினார்.

பின்னர் ஜுபைரின் மனுவை எதிர்த்து, அலகாபாத்தின் அட்வகேட் ஜெனரல், மனுதாரர் ஒரு பழக்கமான குற்றவாளி, இதற்கு முன்பும் அவர் பிற மதங்களை புண்படுத்தும் வகையில் ட்வீட் செய்துள்ளார். இதற்கா அவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே FIRஐ தள்ளுபடி செய்யக்கூடாது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், முகமது ஜுபைரின் மனுவை நிராகரித்தது. வழக்கு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கில் மேலதிக விசாரணைக்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தோன்றுகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதேபோல் டைம்ஸ் நவ் விவாதத்தின் போது, நிபுர் சர்மா பேசிய ஒரு வீடியோவை எடிட் செய்து ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் பதிவிட்ட ஒரு பதிவே, இந்த நபிகள் நாயகம் பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. அதன் பிறகே நிபுர் சர்மாவிற்கு எதிராக கொலை மிரட்டல் மற்றும் கற்பழிப்பு மிரட்டல் தொடர்ந்து வர தொடங்கின.

மேலும் டைம்ஸ் நவ் ஆசிரியர் நவிகா குமாரை குறிவைத்தும், ஜுபைர் ட்வீட் செய்துள்ளார். ஒரு சமூகம் மற்றும் மதத்திற்கு எதிராக பேசுவத்ற்கு ஏன் விவாதம், சிறந்த வேலை செய்யக்கூடிய அறிவிப்பாளர்கள் ஏற்கனவே எங்களிடம் உள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் ஜுபைரின் எஃப்ஐஆரை நீக்க கோரிய ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.