புதிய கட்சியை துவக்க உள்ளதாக அமரிந்தர் சிங் அறிவிப்பு.. 2022ல் பாஜகவுடன் கூட்டணி..?

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் புதிய கட்சி துவங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தால் 2022 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் எனவும் கூறியுள்ளார்.

பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் கேப்டன் அமரிந்தர் சிங்கிற்கும் இடையேயான மோதலால் செப்டம்பர் 18 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பின்னர் பஞ்சாப் புதிய முதவராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை நியமித்தது.

இருப்பினும் சன்னி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், பெண்கள் தொடர்பான பிரச்சனைகளிலும் அவர்மேல் விமர்சனம் இருந்ததால் சன்னிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. கருத்து கணிப்பின் படி 2022 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 30 அன்று முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அமித்ஷாவை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார்.

Also Read: மேற்குவங்கத்தில் பரபரப்பு.. பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் சுட்டுக்கொலை..

பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலத்திற்கான போர் நடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப் மக்களின் நலனுக்காகவே புதிய கட்சியை துவக்க உள்ளேன். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் பாஜகவுடன் 2022 தேர்தலில் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக அமிரிந்தர் சிங் கூறியதாக அவரின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Also Read: OTT, கிரிப்டோ கரன்சி மற்றும் மொபைல் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்: RSS தலைவர் மோகன் பகவத்

மேலும் ஒத்த கருத்துடைய அகாலி குழுக்கள், திண்ட்சா மற்றும் பிரம்புரா போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உடன் அவர் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்போது அதனை மறுத்தார். இப்போது புதிய கட்சியை துவங்க உள்ளதாக அறிவித்து இருக்கும் அமரிந்தர், பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

Also Read: மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.