சீனாவின் வலையில் சிக்கிய மற்றொரு நாடு.. ஜப்பான் செல்கிறார் ஜசிந்தா ஆர்டெர்ன்..
’சீனா உடனான வலுவான வர்த்தக உறவினால் சீனாவுடன் நெருக்கம் காட்டிய நியூசிலாந்து தற்போது பொருளாதார நெருக்கடியால் சீனாவிடம் இருந்து விலகி வருகிறது. சீனா உடனான வர்த்தகத்திற்கு பதிலாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உடன் வர்த்தகத்தை தொடர நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் முடிவு செய்துள்ளார்.
தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜசிந்தா ஆர்டெர்ன், கூட்டணி கட்சி ஆரதவுடன் 2017 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தார். இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் சீனா உடனான வர்த்தகம் குறைந்துவிட்டது. மேலும் சுற்றுலா வருவாயும் மிகக்குறைந்து விட்டது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவர் திங்களன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஜசிந்தா ஆர்டெர்ன் பயணம் மேற்கொள்கிறார். நிச்சயமற்ற பொருளாதார கொள்கையால் கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக குறைந்துள்ளது. டெல்டா தொற்றால் ஜிடிபி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவர் ஜப்பான் மற்றும் தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். நியூசிலாந்தின் சுற்றுலா துறையும் குறைந்துள்ளது. நாட்டில் 10 சதவீத பணியாளர்கள் சுற்றுலாவை நம்பியே உள்ளனர். சீன சுற்றுலா பயணிகள் மூலம் ஆண்டுக்கு 1.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது.
Also Read: நிதி நெருக்கடியால் வீடுகள் மற்றும் தொழிற்துறைக்கான மின்சாரத்தை நிறுத்தவுள்ள பாகிஸ்தான்..?
தற்போது அதனை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா பயணிகள் மூலம் ஈடுகட்ட பிரதமர் விரும்புகிறார். நியூசிலாந்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சீனா உடனான வர்த்தகம் 28 சதவீதம் ஆகும். மேலும் கல்வி மூலம் நியூசிலாந்து 5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுகிறது. நியூசிலாந்துக்கு படிக்க வரும் சர்வதேச மாணவர்களில் 47 சதவீதம் பேர் சீன மாணவர்கள் ஆவார்கள்.
Also Read: சீனாவின் 3 சூரிய மின்சக்தி திட்டத்தை ரத்து செய்து இந்தியாவிற்கு வழங்கிய இலங்கை..?
சமீபத்தில் நடத்திய கருத்துகணிப்பில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிளாலர் கட்சிக்கு 37 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்கட்சியான தேசிய கட்சிக்கு 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் மக்களின் நம்பிக்கையை பெற சீனாவிடம் இருந்து விலகி ஜசிந்தா ஆர்டெர்ன் ஜப்பான், சீங்கப்பூர் மற்றும் தென்கொரியாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளார்.