மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..

காஷ்மீரில் பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் மீண்டும் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும் என அமித்ஷா எச்சரித்துள்ளார். கோவாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைகழகத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் பற்றி நினைவு கூர்ந்தார். மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது தான் பாகிஸ்தானுக்குள் புகுந்து சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமித்ஷா கூறினார்.

கடந்த பத்து நாட்களுக்குள் காஷ்மீரில் ஆறு பொதுமக்கள் மற்றும் ஐந்து இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியாகினர். இதற்கு பாகிஸ்தானின் எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதலே காரணம். பிரதமர் மோடியும் மனோகர் பாரிக்கரும் இணைந்து நடத்திய சர்ஜிகல் தாக்குதல் ஒரு முக்கியமான படியாகும் என அமித்ஷா விழாவில் பேசினார்.

இந்தியாவின் பாதுகாப்பை யாரும் சீர்குலைக்க முடியாது. பேச்சுவார்த்தைக்கு ஒரு நேரம் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இனி பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது என அமித்ஷா கூறினார்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம்..

இந்தியாவின் உரி தாக்குதலுக்கு பதிலடியாக செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குல் புகுந்து சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது. 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Also Read: காஷ்மீர் பண்டிட் படுகொலை எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை..

பின்னர் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தான் கோவாவில் நடைபெற்ற விழாவில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை நிறுத்தாவிட்டால் மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார்.

Also Read: தமிழகத்தின் மதுரையில் ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தது NIA..

Leave a Reply

Your email address will not be published.