இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1 மில்லியன் ஐபோன்களை ஏற்றுமதி செய்த ஆப்பிள் நிறுவனம்..
202 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 1 மில்லியன் ஐபோன்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது 50 சதவீதம் அதிகரிப்பு என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
சந்தை நுண்ணறிவு நிறுவனமான சைபர் மீடியா ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் 13 விற்பனையில் 22 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாடலகளும் சீரான வளர்ச்சியை எட்டியுள்ளன.
இந்தியாவில் மேம்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஐபோன் உற்பத்தி திறன்கள் மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றால் இந்தியாவில் ஆப்பிள் ஐபோனின் வளர்ச்சி வேகமடைந்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஐபோன் 13 மாடலை இந்த மாதம் முதல் உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read: கர்நாடகாவில் அமைகிறது இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை..!
தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 11, 12 மற்றும் 13 மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஐபோன் SE மற்றும் ஐபோன் 12 மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் 5.2 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: 1.8 லட்சம் கோடிக்கு மருந்து ஏற்றுமதி செய்து சாதனை படைத்த இந்தியா..?
இந்த ஆண்டு முதல் காலாண்டில், ஐபோன் 11, 18 சதவீத பங்கையும், ஐபோன் 13, 20 சதவீத பங்கையும், ஐபோன் 12, 52 சதவீத பங்கும் கொண்டு முன்னிலை வகிக்கிறது. ஐபாட்களை பொறுத்தவரையில் ஆப்பிள் நிறுவனம் 31 சதவித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஐபேட் 9வது தலைமுறை சந்தையில் 45 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.