பாகிஸ்தானின் போர் விமானத்தை வாங்க உள்ள அர்ஜென்டினா..? எந்த விமானம் தெரியுமா..?

பாகிஸ்தானின் ஜேஎப்-17 தண்டர் போர் விமானத்தை அர்ஜென்டினா வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், சீனா கூட்டு தயாரிப்பான ஜேஎப்-17 தண்டர் விமானத்தை வாங்க அர்ஜென்டினா 664 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளதாக அர்ஜென்டினா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜேஎப்-17 தண்டர் என்பது பாகிஸ்தானின் ஏரோநாட்டிகல் காம்ப்ளக்ஸ் மற்றும் சீனாவின் செங்டு விமான நிறுவனத்தால் இணைந்து தயாரிக்கப்பட்ட ஒற்றை எஞ்சின் கொண்ட மல்டிரோல் போர் விமானம் ஆகும். இந்த விமானத்தின் மூலம் தாக்குதல், இடைமறிப்பு, கப்பல் எதிர்ப்பு மற்றும் உளவு போன்ற பணிகளில் ஈடுபடுத்த முடியும்.

இந்த ஜேஎப்-17 விமானத்தில் 58 சதவீத பாகத்தை பாகிஸ்தான் தயாரிக்கிறது. மீதம் உள்ள 42 சதவீத பாகத்தை சீனா தயாரித்து பாகிஸ்தானிற்கு அனுப்பும். இவை அனைத்தும் பாகிஸ்தானில் ஒருங்கிணைக்கப்பட்டு போர் விமானம் உருவாக்கப்படுகிறது.

இந்த நிலையில் அர்ஜென்டினா 12 ஜேஎப்-17 போர் விமானத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி ஒதுக்கினாலும் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. நீண்ட காலமாக போர் விமானம் வாங்க அர்ஜென்டினா முயற்சித்து வருகிறது. இருப்பினும் நிதி பற்றாக்குறை மற்றும் பிரிட்டிஷ் தலையீட்டால் வாங்க முடியவில்லை.

Also Read : மிராஜ் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் விமானப்படையுடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம்.. புதிதாக 350 போர் விமானங்கள்..

தென் கொரியாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்க முயற்சித்த போது அதனை இங்கிலாந்து தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அர்ஜென்டினா பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை வாங்க உள்ளது. ஜேஎப்-17 விமானத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

விமானம் தறையிறங்கும் போது அதிகமான அதிர்வு, துப்பாக்கி பிரச்சனை, ரேடார் பிரச்சனை, பராமரிப்பு செலவு என விமானத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. விமானத்தில் இவ்வளவு பிரச்சனை இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் புலம்பி உள்ளது. இந்த நிலையில் அர்ஜென்டினா ஜேஎப்-17 தண்டர் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

Also Read : அவசர காலத்தில் தரையிறங்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் புதிதாக ஓடுபாதைகள்..?

Leave a Reply

Your email address will not be published.