இந்தியாவிடம் இருந்து பினாகா ராக்கெட்டுகளை வாங்க உள்ள ஆர்மீனியா..?

ஆர்மினிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சுரேன் பாபிக்யான், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார். இருவரும் இருதரப்பு இராணுவம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப சாத்தியகூறுகள் பற்றி விவாதித்தனர்.

பேச்சுவார்த்தையில் தற்போது அஜர்பைஜான் ஆர்மினியா மோதல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டிற்கு சுரேன் பாபிக்யான் நன்றி தெரிவித்தார். பின்னர் ராஜ்நாத்சிங்கை ஆர்மினியாவிற்கு வரும்படி சுரேன் பாபிக்யான் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ தளவாடங்கள் குறித்து விவாதிக்க ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் குழு ஒன்று இந்தியா வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் ஆர்மீனியா கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவிடம் இருந்து வாங்க உள்ளதாக தகவல் வெளியானது.

பினாகா ராக்கெட் வாங்குவது தொடர்பாக பினாகா ராக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் சோலார் குழுமத்துடன் ஆர்மீனியா கையெழுத்திட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆர்மீனியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 40 மில்லியன் டாலர்களுக்கு சுவாதி ரேடார் அமைப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது.

ஆர்மீனியா பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில், அஜர்பைஜான் பாதுகாப்புத்துறை அமைச்சரும் விரைவில் இந்தியா வர உள்ளார். அஜர்பைஜானுக்கு துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.