பயங்கரவாத தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் கமாண்டன்ட், அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் பலி.. பிரதமர் மோடி கண்டனம்..

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த கர்னல் லிப்லவ் திரிபாதி (CO-46 AR), அவரது மனைவி மற்றும் 8 வயது மகன் மற்றும் மேலும் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்னல் லிப்லவ் திரிபாதி அவரது குடும்பத்தினர் மற்றும் மற்ற வீரர்களுடன் நிறுவன தளத்தில் இருந்து தனது பட்டாலியன் தலைமையகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் IED கண்ணி வெடியை வெடிக்க செய்துள்ளனர். பின்னர் துப்பாக்கி மூலம் வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் கர்னல் திரிபாதி, அவரது குடும்பம் மற்றும் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த நான்கு வீரர்கள் அருகில் உள்ள பெஹியாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் இன்று காலை 11 மணி அளவில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று வீரமரணம் அடைந்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். “அவர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது, இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன” என மோடி கூறியுள்ளார்.

மணிப்பூர் முதல்வர் நோங்தோம்பம் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பயங்கரவாதிகளை பிடிப்பதில் மாநில படைகளும் துணை இராணுவ படைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள் என முதல்வர் கூறினார்.

Also Read: இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வேதனையானது மற்றும் கண்டனத்துக்குரியது. இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 5 துணிச்சலான வீரர்களை நாடு இழந்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Also Read: S-500 அமைப்பை வாங்க தயார்..? ஆனால் இந்தியாவுக்கு விற்க கூடாது.. ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த சீனா..

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் குழு தனி நாடு கோரி அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்தியது மணிப்பூரை தளமாக கொண்ட மக்கள் விடுதலை இராணுவம் என கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க இராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை

Leave a Reply

Your email address will not be published.