ஆப்கன் மக்களுக்கு இந்தியாவில் அடைக்கலம்..? மத்திய அரசு ஆலோசனை..

ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தாலிபான்களால் அச்சுருத்தலை எதிர்கொள்பவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மகாணங்களில் 18 மகாணங்களை தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தாலிபான்கள் தலைநகர் காபூலில் புகுந்து தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தாலிபான்கள் தலைநகரை கைப்பற்ற சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், தலைநகர் காபூலில் தாலிபான்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் தாலிபான்களால் திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு தாலிபான்களுக்கு திருமணம் செய்து வைத்து வருகின்றனர்.

இதனால் சில உலக நாடுகள் ஆப்கன் மக்களுக்கு விசா வழங்க உள்ளன. அமெரிக்க ஆப்கனில் தங்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு விசா வழங்கியுள்ளது. மேலும் கனடாவும் 20,000 மக்களுக்கு குடியுரிமை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவும் ஆப்கன் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் பல ஆப்கானிஸ்தானியர்கள் வசித்து வருகிறார்கள்.

மேலும் தலைநகர் காபூல் விமானநிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தாலிபான்கள் பிடியில் வந்த நகரத்திலிருந்து மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்தியா இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர் இந்தியாவில் குடியேரலாம் என அறிவித்திருந்தது. தற்போது ஆப்கனில் நிலைமை மோசமாகி வருவதால் ஆப்கன் இஸ்லாமிய மக்களுக்கும் குடியுரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.