பாகிஸ்தானில் சீனர்கள் மீது தாக்குதல்.. எச்சரித்த சீனா..

பாகிஸ்தானில் சமீப காலமாக சீனர்கள் தாக்கப்படுவது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் சீனர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் முக்கிய பொருளாதார திட்டமான பெல்ட் அண்ட் ரோட் என்கிற பட்டுச்சாலை திட்டம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பலுசிஸ்தானில் உள்ள துறைமுகத்தில் முடிவடைகிறது. இந்த திட்டத்தில் சாலை, மேம்பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் துறைமுகத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் இதற்கு பலுசிஸ்தான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் சீனர்கள் சென்ற பேருந்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 சீனர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பான பிரச்சனையை தீர்க்க ராணுவ அதிகாரிகள், ஐஎஸ்ஐ தலைவர் உட்பட ஒரு குழு சீனா சென்று தற்கொலைப்படை தாக்குதல் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சீனர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் அருகில் விளையாடி கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு சீனர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.