இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கிகரித்துள்ளது ஆஸ்திரேலியா..

ஆஸ்திரேலியா இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கிகரித்துள்ளது. அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியா சர்வதேச எல்லையை திறக்க உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது மாடர்னா, ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனிகா தயாரித்த தடுப்பூசிகளை அங்கிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் சீனாவின் சீனோவாக் தடுப்பூசியையும் அங்கிகரித்துள்ளது.

வெளிநாடு செல்ல விரும்பும் ஆஸ்திரேலியர்கள் இந்த தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை போட்டுக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் தடுப்பூசி போட்டவர்கள் ஒரு வாரமும், தடுப்பூசி போடாதவர்கள் 14 நாட்களும் தனிமைபடுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Also Read: வானியல் ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியாவின் லடாக் ஆய்வகம் சிறந்த இடம்: ஆராய்ச்சியாளர்கள்

கொரோனா தொற்று குறைந்த நியூசிலாந்து போன்ற சில நாடுகளுக்கு மட்டும் ஆஸ்திரேலியா தனிமை படுத்தப்படாத பயணத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியர்கள் இந்த நாடுகளுக்கு சென்று ஆஸ்திரேலியா திரும்பும் போது தனிமைபடுத்த பட மாட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் தினமும் 2500 முதல் 3,000 வரை புதிய கோவிட் தொற்று பதிவாகி வருகிறது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம்” 140 நாடுகளை இணைக்கும் பிரதமர் மோடியின் சூரியஒளி திட்டம்..

Also Read: ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்க இந்தியாவிற்கு தாலிபான் விமான போக்குவரத்து அமைச்சர் கடிதம்..

Leave a Reply

Your email address will not be published.