சீனாவை தாக்கிய குட்டி யானை.. இந்தியா தான் காரணம் என சீனா கதறல்..

சீனா மற்றும் பல தெற்காசிய நாடுகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இந்திய ஹேக்கர்கள் இருப்பதாக சீனாவின் அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் பாதுகாப்பு, இராணுவ பிரிவுகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வைரஸ் நிறுவனமான ஆன்டிய் லேப்ஸ் (Antiy Labs) தெரிவித்துள்ளது. ஆன்டிய் லேப்ஸ் நிறுவனத்தின் துணை தலைமை பொறியாளர் லி போசாங் கூறியதாவது, சீனா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் சீன அரசு நிறுவனங்கள், இராணுவ பிரிவுகள், முக்கிய நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போசாங் கூறினார். மேலும் யூ ஷியான் மற்றும் பாய் ஷியான் போன்ற வைரஸ் மூலம் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யூ ஷியான் என்றால் சீன மொழியில் குட்டி யானை என் பொருள். பாய் ஷியான் என்றால் வெள்ளை யானை ஆகும். இந்த வைரஸ் மூலம் இந்திய ஹேக்கர்கள் சீன இராணுவ பணியாளர்கள் போல் வேடமிட்டு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். அதன் மூலம் சீன வலைதளங்களை பார்வையிடவும், கடவுச்சொல்லை சேகரிக்கவும் அவர்கள் மின்னஞ்சலை போலியாக அனுப்புகிறார்கள்.

இந்தியாவை சேர்ந்த இந்த ஹேக்கர்கள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இந்த குட்டி யானை தாக்குதல் 2017 ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஆனால் பெரிய அளவில் இருக்காது. ஆனால் இந்த ஆண்டு குட்டி யானை மற்றும் வெள்ளை யானையின் சைபர் தாக்குதல் அதிகரித்துள்ளது. அவர்கள் சீனாவின் பெரிய பல்கலைகழகங்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், பாதுகாப்பு துறைகளை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர் என லீ போசாங் தெரிவித்துள்ளார்.

Also Read: அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்கும் தாலிபான்.. இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு..

மேலும் இது போன்ற சைபர் தாக்குதல்கள், சமூக பாதுகாப்பிற்கும், அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் தனியுரிமைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற வாய்ப்பு உள்ளது. ஹேக்கர்கள் பயனர்களுக்கு போலியான மின்னஞ்சலை அனுப்பி அதன் மூலம் கடவு சொல் மற்றும் தரவுகளை பதிவிறக்கம் செய்து ஹேக்கர்களுக்கு அனுப்பப்படுவதாக லி தெரிவித்தார்.

Also Read: மீண்டும் ஒரு பனிப்போர் ஏற்படும்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை..

பயனர்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது அவர்களுக்கு “restricted” அல்லது “Updating e-mail System” போன்ற செய்தியை காண்பிக்கும். பின்னர் மீண்டும் உள்நுழைய சொல்லும். இது முடிந்ததும் அதன் முழு இணையதளமும் ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும் என லி தெரிவித்துள்ளார். பொதுவாக சீன ஹேக்கர்கள் தான் மற்ற நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் தற்போது சீனா மீதே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சீன அரசு ஊடகம் வெளிப்படையாகவே இந்தியா மீது குற்றம் சாட்டி உள்ளது.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.