அர்ஜுன் MK-II டாங்கியை வாங்க பஹ்ரைன் ஆர்வம்..? இந்தியாவுடன் பேச்சுவார்த்தை..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் MK-II டேங்கை வாங்குவது தொடர்பாக இந்தியாவுடன் பஹ்ரைன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹ்ரைன் இராணுவம் தற்போது அமெரிக்காவின் M66A3 டாங்கிகளை பயன்படுத்தி வருகிறது. மேலும் இத்தாலி நிறுவனமான லியோனார்டோ பஹ்ரைன் இராணுவத்தின் M66A3 டாங்கிகளை 105 மிமீ இருந்து 120 மிமீ துப்பாக்கியாக மாற்றியமைக்க பரிந்துரைத்துள்ளது,

மேலும் ஒரு புதிய அதிநவீன தீ கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஒரு புதிய கவச பாதுகாப்பு, மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவற்றை மேம்படுத்த லியோனார்டோ முன்மொழிந்துள்ளது. டேங்கை மேம்படுத்தும் உரிமத்தை லியோனார்டோ பெற்றுள்ளது.

இந்த நிலையில் பஹ்ரைன் இந்தியாவின் அர்ஜுன் MK-II டேங்கை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. 2010ல் இராணுவத்தால் நடத்தப்பட்ட பாலைவன சோதனையின் போது இந்தியாவின் அர்ஜுன் MK-I ரஷ்யாவின் டி-90 டேங்குகளை விஞ்சியது. எனவே பாலைவனம் மற்றும் வெப்பமான பகுதிகளில் பயன்படுத்த அர்ஜுன் MK-II சிறந்தது ஆகும்.

ஆனால் பஹ்ரைன் எத்தனை டேங்குகள், எவ்வளவு விலையில் வாங்க உள்ளது என எதுவும் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. அர்ஜுன் MK-II முதன்முறையாக 2014 பிப்ரவரியில் புதுதில்லியில் ராணுவ அணிவகுப்பின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

அர்ஜுன் MK-II டேங்க் 120 மிமீ பீரங்கியை கொண்டுள்ளது. மிகப்பெரிய வெடிமருந்துகளை சுடக்கூடியது. முக்கிய ஆயுதமாக தெர்மல் ஸ்லீவ், ஃப்யூம் எக்ஸ்ட்ராக்டர் ஆகியவை உள்ளது. இதில் FSAPDS. HESH. PCB. TB மற்றும் இஸ்ரேலிய லேசர் ஹோமிங் எதிர்ப்பு தொட்டி ஏவுகணை (LAHAT) ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

Also Read: உக்ரைன் மீது முதன்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..?

LAHAT ஏவுகணையானது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸின் MBT பிரிவால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையாகும். அர்ஜுன் MK-II டெங்கில் நவீன வெடிக்கும் எதிர்வினை கவச பாதுகாப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் டி-90 மற்றும் கொன்டாக்ட்-5 தொழிற்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.

இந்த டாங்கி வி-90 டர்போசார்ஜ் செய்யப்பட்ட சார்ஜ் கூல்டு, வாட்டர் கூல்டு டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 2.400 rpm இல் 1030 கிலோவாட் உற்பத்தி செய்கிறது. அர்ஜுன் MK-II வின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர் மற்றும் ஆஃப் ரோடு உட்பட குறுக்கு நிலப்பரப்பில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

Also Read: இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி..?

அதிகப்பட்சமாக 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும். மேலும் மேம்பட்ட தெர்மல் இமேஜிங் மற்றும் வேட்டையாடும் கொலையாளி திறனுக்கான பனோரமிக் காட்சிகள் உள்ளிட்ட மிக நவீன ஒளியியல் மற்றும் தீ கட்டுப்பாட்டு அமைப்பையும் கொண்டுள்ளது. தானியங்கி இலக்கு கண்காணிப்பு பொருத்தப்பட்டுள்ளதால் மிக துல்லியமான இலக்கு மற்றும் வேகத்தை வழங்குகிறது.

இரண்டாம் நிலை ஆயுதமாக ஆன்ட்டி பர்சனல் இலக்குகளுக்கான கோஆக்சியல் 7.62 மிமீ இயந்திர துப்பாக்கியும், விமான எதிர்ப்பு மற்றும் தரை இலக்குகளுக்கான 12.7 மிமீ இயந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அர்ஜுன் MK-II இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த டாங்கியாகும்.

Leave a Reply

Your email address will not be published.