பஜாஜ், TVS நிறுவனங்கள் ஆதிக்கம்.. ஆப்ரிக்காவை விட்டு வெளியேறிய சீன நிறுவனங்கள்..
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் மூலம் ஆப்ரிக்காவில் சீன நிறுவனங்கள் தங்கள் தடங்களை பதித்துள்ள நிலையில், தற்போது அந்த நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், இந்தியாவின் பஜாஜ் மற்றும் TVS நிறுவனங்கள் ஆப்ரிக்காவில் வளர்ச்சி கண்டு வருகின்றன.
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, பஜாஜ் மற்றும் TVS நிறுவனங்கள் மூலம் சீனாவின் 160 கும் மேற்பட்ட சீன இருசக்கர நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளன. 40 சீன நிறுவனங்கள் இணைந்து ஆப்ரிக்க சந்தையில் பிடித்த அதே இடங்களை இந்தியாவின் பஜாஜ் மற்றும் TVS நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆப்ரிக்க சந்தைகளில் பஜாஜ் நிறுவனம் முதல் 2 இடங்களுக்குள் வந்துள்ளது. பஜாஜ் நிறுவனம் ஆப்ரிக்க கண்டத்தில் 2.4 முதல் 2.7 மில்லியன் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்திய இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் 50 சதவீத சந்தையில், பஜாஜ் நிறுவனம் மட்டும் 40 சதவீத பங்கை கொண்டுள்ளது.
CAGR அறிக்கையின் படி நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கினியா, கென்யா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் TVS நிறுவனம் ஆண்டுக்கு 35 சதவீத வளர்ச்சியை பதிவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட பைக்குகளை நேரடியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன.
மற்றவை உள்ளுரிலே உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகவும் ஏழை நாடான ஆப்ரிக்க கண்டத்தில் சீனா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் பைக்குகளை விற்பனை செய்ய தொடங்கின. சீனாவின் பைக்குகள் மிகவும் விலை குறைந்தவை, ஆனால் தரமற்றவை மற்றும் ஜப்பான் பைக்குகள் விலை அதிகம் மற்றும் தரமானவை.
ஜப்பானிய பைக்குகள் விலை அதிகம் இருப்பதால் ஆப்ரிக்கர்கள் சீன பைக்குகளையே அதிகம் வாங்க தொடங்கினர். அது மட்டும் இல்லாமல் சீனா தனது பைக் பாகங்களை பெட்டிகளில் ஏற்றுமதி செய்து, மக்கள் அவற்றை வாங்கி உள்ளுர் அசெம்பிளர்களிடம் கொடுத்து இறுதியாக பைக்குகளை வாங்கி செல்வார்கள்.
Also Read: பிரான்ஸ் நாட்டில் விரைவில் இந்தியாவின் UPI மற்றும் Rupay சேவை.. அமைச்சர் அறிவிப்பு..
ஆனால் சீன பைக்குகள் ஆப்ரிக்க சாலைகளுக்கு உகந்ததாக இல்லை. நாளடைவில் பாகங்கள் உடைய தொடங்கின. மேலும் பைக்குகளுக்கு சீனா சேவை மற்றும் பழுதுபார்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில் தான் இந்திய பைக்குகள் ஆப்ரிக்க சந்தையில் நுழைய தொடங்கின. இந்திய பைக்குகள் சீன பைக்குகளை விட விலை அதிகம் மற்றும் ஜப்பான் பைக்குகளை விட விலை குறைவு. அதே நேரம் ஜப்பான் பைக்குகளை போன்றே தரமானவை.
இதனால் ஆப்ரிக்கர்கள் இந்திய பைக்குகளை வாங்க தொடங்கினர். பழுது பார்ப்பு சேவையும் வழங்கப்படுகின்றன. பெரும் பாலும் ஆப்ரிக்காவில் பைக்குகள் தனிப்பட்ட பயன்பாட்டை விட வணிக பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ரேபிடோ போன்று மக்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல இந்த பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பைக்குகளை ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.