சீனாவின் ஜின்ஜியாங்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை.. கையெழுத்திட்டார் ஜோ பிடன்..

சீனாவில் நடந்து வரும் உய்கூர் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு எதிராக மற்றும் ஜின்ஜியாங் மகாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கான சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளிகிழமை அன்று கையெழுத்திட்டுள்ளார். இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

உய்கூர் கட்டாய தொழிலாளர் தடுப்பு சட்டம் என கூறியுள்ள அமெரிக்கா, சீனாவின் உய்கூர் முஸ்லிம்களை இனபடுகொலை செய்வதற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டம் இயற்றிய பிறகு காங்கிரஸில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் இப்போது சீனா மற்றும் அமெரிக்கா இடையே மேலும் மோதலை அதிகரித்துள்ளது.

இந்த சட்டம் ஜின்ஜியாங்கில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜின்ஜியாங்கில் உள்ள உய்கூர் மற்றும் பிற முஸ்லிம் முகாம்களில் பொருட்கள் கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அங்கு அதிகமாக பருத்தி, தக்காளி மற்றும் பாலிசிலிகான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த சட்டத்தை வரவேற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்டன், ஜின்ஜியாங்கில் நடந்து வரும் இன படுகொலையின் பின்னணி உட்பட கட்டாய தொழிலாளர்களை எதிர்த்து போராடுவதற்கான வாஷிங்டனின் உறுதிபாட்டை அடிகோடிட்டு காட்டுவதாக கூறியுள்ளார். மேலும் மனித உரிமைகளை மீறுவதற்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகளை வலுபடுத்துவதற்கு காங்கிரஸூடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக பிளிங்கன் தெரிவித்தார்.

Also Read: சீன உயிரி தொழிற்நுட்பம் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. முற்றும் மோதல்..

ஜனநாயக கட்சியின் செனட்டர் ஜெஃப் மெர்க்லி கூறுகையில், இனப்படுகொலை மற்றும் அடிமை தௌழிலாளர்களுக்கு எதிராக ஒரு உறுதியான மற்றும் தெளிவான செய்தியை அனுப்புவது அவசியம். இப்போது, சீனாவின் கொடூரமான மனித உரிமை மீறல்களில் கவனக்குறைவாக இல்லாமல் அமெரிக்க நுகர்வோர் மற்றும் வணிகங்கள் பொருட்களை வாங்க முடியும் என்பதை நாங்கள் உறுதிபடுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

Also Read: சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது..? பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அலினா சான் தகவல்..

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம், இந்த செயல் உண்மையை புறக்கணிக்கிறது மற்றும் ஜின்ஜியாங்கில் மனித உரிமைகள் நிலைமையை தீங்கிழைக்கும் வகையில் அவதூறு செய்கிறது என கூறியுள்ளது. இது சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச உறவுகளின் விதிமுறைகளின் கடுமையான மீறல், இது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது ஆகும்.

Also Read: குளிர்கால ஒலிம்பிக் புறக்கணிப்பு.. அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை..

சீனா இதனை கடுமையாக கண்டிக்கிறது மற்றும் உறுதியாக நிராகரிக்கிறது. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத இயக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவசியமானவை என சீன தூதரக செய்தி தொடர்பாளர் லியு பெங்யு அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பருத்தி மற்றும் 10 மில்லியன் டாலர் அளவுக்கு தக்காளி பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.