சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..

சீனாவில் பெரும் நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன. அமெரிக்கா சீனா வர்த்தக போர், அறிவுசார் சொத்து திருட்டு, ஹாங்காங் தன்னாட்சியை அழித்தது, உய்கூர் முஸ்லிம் மனித உரிமை மீறல், கோவிட் தொற்று போன்ற காரணங்களால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதால் அமெரிக்க மற்றும் பிற நாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தளத்தை வேறு நாட்டிற்கு மாற்றி வருகின்றனர்.

ஆப்பிள்: ஆப்பிள் நிறுவனம் தனது நிறுவனத்தை இந்தியா மற்றும் வியட்நாமிற்கு மாற்றுகிறது. ஆப்பிளின் தொழிற்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியில் 30 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையில் பாக்ஸ்கான் இந்தியாவில் ஆலை அமைக்க 1 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. அதேபோல் வியட்நாமிலும் ஆலை அமைக்க பாக்ஸ்கான் 270 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியாவிலும் ஆலை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நைக்: விளையாட்டு ஆடைகளை தயாரித்து வரும் நைக் நிறுவனம் ஜின்ஜியாங் மகாணத்தில் நடக்கும் உய்கூர் முஸ்லிம் மனித உரிமை மீறல் பற்றி கருத்து தெரிவித்து இருந்தது. இதனால் சீன மக்கள் நைக் நிறுவனத்தின் ஆடைகளை புறக்கணித்ததால் அந்நிறுவனம் 59 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதனால் சீனாவை விட்டு வெளியேறி தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு தனது உற்பத்தி ஆலைகளை மாற்றுகிறது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்: தென்கொரியாவின் சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்மொபைல் உற்பத்தியை சீனாவில் நிறுத்தியுள்ளது. தனது உற்பத்தி ஆலையை சீனாவில் இருந்து வியட்நாமிற்கு மாற்ற உள்ளது. மேலும் சீனாவில் உள்ள தனது தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனத்தையும் சாம்சங் நிறுத்திவிட்டது.

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்: மற்றொரு தென்கொரிய நிறுவனமான எல்ஜி நிறுவனமும் தன்னுடைய குளிர்சாதன உற்பத்தி ஆலையை தென்கொரியாவிற்கு மாற்றியுள்ளது. விரைவில் அனைத்து உற்பத்தி ஆலைகளையும் தென்கொரியாவிற்கு மாற்ற உள்ளது.

அடிடாஸ்: ஜெர்மனை சேர்ந்த அடிடாஸ் நிறுவனமும் தனது தொழிற்சாலையை அருகில் உள்ள வியட்நாமிற்கு மாற்ற உள்ளது. இந்நிறுவனமும் உய்கூர் முஸ்லிம் மனித உரிமை மீறல் குறித்து கருத்து தெரிவித்ததால் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் தனது சப்ளையர்கள் உடனான அனைத்து உறவையும் துண்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பூமா: மற்றொரு ஜெர்மன் நிறுவனமும் தனது தொழிற்சாலையை சீனாவில் இருந்து இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மாற்ற உள்ளது. உய்கூர் பிரச்சனையால் இந்த நிலையாடு எடுத்துள்ளதாக தெரிகிறது. காலணிகள், விளையாட்டு உடைகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலையையும் மாற்ற உள்ளது.

ஜூம்: அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனமான ஜூம் நிறுவனமும் அமெரிக்க கட்டணங்களை தவிர்க்க சீனாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

ஷார்ப்: இந்நிறுவனம் தைவானின் பாக்ஸ்கானுக்கு சொந்தமானது. இந்நிறுவனமும் சீனாவில் தனது உற்பத்தியை படிப்படியாக குறைத்து வருகிறது. ஆப்பிளின் தயாரிப்புகளில் ஷார்ப்பின் பங்கும் உண்டு. இதனால் இந்நிறுவனமும் சீனாவை விட்டு வெளியேறுகிறது.

ஹாஸ்ப்ரோ: அமெரிக்காவின் பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஹாஸ்ப்ரோ தனது தொழிற்சாலையை இந்தியா மற்றும் வியட்நாமிற்கு மாற்றியுள்ளது. அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போரால் அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கொரோனா தொற்று காரணமாக தொழிற்சாலையை மாற்றுவதில் சிறிது கால தாமதம் ஏற்படுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா மோட்டார்ஸ்: சாம்சங், எல்ஜி போன்ற தென்கொரியா நிறுவனங்கள் வரிசையில் கியா மோட்டார்ஸ் தனது தொழிற்சாலையை இந்தியா மற்றும் தென்கொரியாவிற்கு மாற்ற உள்ளது. அமெரிக்க சீனா வர்த்தக போர், அமெரிக்க தென்கொரியா நெருக்கத்தினால் கியா மோட்டார்ஸ் புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தினால் தொழிற்சாலையை மாற்ற உள்ளது. மேலும் தென்கொரியா அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் மோட்டார்ஸ்: கியாவின் தாய் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. தனது ஆலையை இந்தியா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மாற்ற உள்ளதாக கூறியுள்ளது. சீனாவை விட்டு வெளியேறுவதால் இந்நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் மொபிஸ்: ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ்க்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் இந்நிறுவனமும் சீனாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. தென்கொரியாவின் பியோங்டேக் நகரில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.

ஸ்டான்லி ப்ளாக் & டெக்கர்: தொழில்துறை கருவிகள் மற்றும் வீட்டு வன்பொருள் தயாரிப்பு அமெரிக்க நிறுவனமான ஸ்டான்லி ப்ளாக் தனது உற்பத்தியை சீனாவில் நிறுவத்துவதாக அறிவித்துள்ளது. தனது தொழிற்சாலையை அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்திற்கு மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

டெல்: அமெரிக்கா சீனா இடையே உறவு மோசமடைந்துள்ளதால் தனது உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற உள்ளதாக கூறியுள்ளது. தனது நோட்புக் உற்பத்தியில் 30 சதவீதத்தை அமெரிக்காவுக்கு மாற்ற உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெச்பி: டெல் நிறுவனத்தின் போட்டியாளரான ஹெச்பி நிறுவனமும் தனது 30 சதவீத உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற உள்ளதாக கூறியுள்ளது. இதனால் அமெரிக்க சந்தைக்கு சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான அமெரிக்க கட்டணத்தை தவிர்க்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் ஆல்பாபெட்: கூகுள் சீனாவில் குறைவாக பயன்படுத்தப்பட்டாலும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சீனாவில் வன்பொருள் தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல் கூகுள் நிறுவனமும் தனது கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை வியட்நாம் மற்றும் தாய்லாந்திற்கு மாற்ற உள்ளது. அதேபோல் மதர்போர்டு தயாரிப்புகள் தைவானுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட்: வர்த்தக போர் மற்றும் கோவிட் தொற்று காரணமாக நோட்புக் மற்றும் டெஸ்க்டாப் பிசிக்களின் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றியுள்ளது. மேலும் வியட்நாமிலும் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கோப்ரோ: அமெரிக்காவின் கேமரா தயாரிப்பு நிறுவனமான கோப்ரோ தனது உற்பத்தியை சீனாவில் நிறுத்த உள்ளதாக கூறியுள்ளது. தனது தொழிற்சாலையை அமெரிக்க மற்றும் மெக்சிகோவுக்கு மாற்ற உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டெல்: அமெரிக்க சீன வர்த்தக போரால் தனது செமிகன்டக்டர் சிப் உற்பத்தி ஆலையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு மாற்ற உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் சிப்கள் தயாரிப்பதற்காக 95 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Also Read : நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

சோனி: சீனாவில் தனது ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை மூடியது ஜப்பானின் சோனி நிறுவனம். இந்த தொழிற்சாலையை தாய்லாந்திற்கு மாற்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா சீனா வர்த்தக போர் மற்றும் சீனாவில் உற்பத்தி செலவு அதிகமாவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிண்டெண்டோ: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான நிண்டெண்டோ தனது உற்பத்தி ஆலையை வியட்நாமிற்கு மாற்ற உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு மோசமான அமெரிக்கா சீனா வர்த்தக உறவே காரணம் என கூறப்படுகிறது.

அண்டர்மார்: அமெரிக்காவின் சாதாரண மற்றும் விளையாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனமான அண்டர்மார் அமெரிக்க சீன வர்த்தக போர் காரணமாக தனது உற்பத்தியை சீனாவில் நிறுத்தி உள்ளது. வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஜோர்டான் மற்றும் இந்தோனேசியாவிற்கு தனது ஆலையை மாற்ற உள்ளதாக கூறியுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ்: அமெரிக்க செய்தி நிறுவனமான தி நியூயார்க் டைம்ஸ், தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த நிலையில் சீனாவின் பாதுகாப்பு சட்டத்தால் ஹாங்காங்கை விட்டு வெளியேறுகிறது.

Also Read : உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்த இந்தியா..

இந்த வரிசையில் காலணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டீவ் மேடன், சில்லறை விற்பனை கடைகளான ஓல்டு நேவி & கேப், ஆடை உற்பத்தி நிறுவனமான சூப்பர் ட்ரை, ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை ஸ்டோர் நிறுவனமான ஸ்பேஸ் NK, தென்கொரிய வலைதள நிறுவனமான நாவர் மற்றும் தைவானை சேர்ந்த கணினி உற்பத்தி நிறுவனமான குவாண்டா கணினி நிறுவனமும் தனது உற்பத்தி தொழிற்சாலையை சீனாவில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்றுகின்றன.

இந்த நிறுவனங்களின் வெளியேற்றத்தால் சீனாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. வேலையை இழந்த மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சீன கம்யூனிஸ்ட் அரசு பணக்காரர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: உலகிலேயே வெண்மையான பெயிண்டை உருவாக்கியுள்ள அமெரிக்க விஞ்ஞானி குழு.. புவி வெப்பமடைதலை குறைக்க உதவும்..

Leave a Reply

Your email address will not be published.