சீனாவின் பெட்ரோகெமிக்கல் ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு…

ஷாங்காயின் ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள சினோபெக் ஷாங்காய் பெட்ரோகெமிக்கல் ஆலையில இன்று அதிகாலை மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சீனாவின் ஜின்ஷான் மாவட்டத்தில் சீன அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய சுத்திகரிப்பு எண்ணெய் நிறுவனமாக சினோபெக் ஷாங்காய் பெட்ரோகெமிக்கல் ஆலையின் எத்திலீன் கிளைகோல் செயலாக்க பிரிவில் இன்று அதிகாலை 4,30 மணி அளவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் காலை 9.00 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நிறுனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் பலத்த தீ காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த ஆலைக்கு அருகில் உள்ள பொதுமக்கள் வெடிசத்தம் கேட்டு தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.

Also Read: பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் குறைவாக தேநீர் அருந்த வேண்டும்: பாகிஸ்தான் அமைச்சர்

மேலும் ஆலையில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் கெமிக்கல் வாசனையை உணர்ந்ததாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆவியாக கூடிய கரிம சேர்மங்களுக்கான பகுதியை கண்காணித்து வருவதாகவும், உள்ளுர் நீர் விநியோகத்தில் எந்த தீங்கு விளைவிக்கும் தாக்கத்தையும் இதுவரை கண்டறியவில்லை எனவும் சினோபெக் தெரிவித்துள்ளது.

Also Read: ஐநாவில் மக்கியை பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு தடை போட்ட சீனா..

சினோபெக் ஷாங்காய் பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஆண்டுக்கு 16 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மற்றும் 700,000 டன் எத்திலீனை கையாளும் திறனை கொண்டுள்ளது. இது 3.5 பில்லியன் யுவான் அதாவது 520 மில்லியன் டாலர் மதிப்பிலான கார்பன் ஃபைபர் திட்டத்தை உருவாக்கி வருகிறது.

Also Read: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான நிதியை 50% குறைத்த பாகிஸ்தான் அரசு..

Leave a Reply

Your email address will not be published.