மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு.. 3 பயங்கரவாதிகளிடம் இருந்து 12 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்..

ராஜஸ்தான் போலீசார் புதன்கிழமை நிம்பஹேராவில் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ RDX வெடிபொருளை மீட்டனர். இதன் மூலம் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் மாநிலம், ரத்லாமை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 தீவிரவாதிகளை கைது செய்தனர். இவர்கள் ஜெய்பூரில் தொடர் குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இந்த மூன்று பேரும் ரத்லமில் இருந்து ஜெய்பூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் போலிசார் சித்தோர்கர், நிம்பஹரா சாலையில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது MP நம்பர் பிளேட் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டபோது காருக்குள் மறைத்து வைத்திருந்த 12 கிலோ ஆர்டிஎக்ஸ், வெடிகுண்டு டைம்ர்கள் மற்றும் பிற வெடிபொருட்களை போலிசார் கண்டுபிடித்தனர்.

Also Read: நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் 77 சதவீதமும், உயிரிழப்பு 85 சதவீதமும் குறைந்துள்ளது..!

பின்னர் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நவராத்திரியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் அல் சுஃபா என்ற பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

வெடிபொருள் சட்டம், 1908 பிரிவு 4, 5, 6 மற்றும் 13, 15, 16, 18, 20 சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) 1967 ஆகியவற்றின் கீழ் சித்தோர்கர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: காங்கோவில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள். 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published.